Current-Affairs-Updates

தமிழகம்

1.மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயர் இன்று முதல்  சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2.இந்தியாவில் முதன் முறையாக வாட்ஸ் ஆப் மூலம் பாஸ்போர்ட் சேவை மதுரை மண்டலத்தில் அறிமுகபடுத்தப்பட்டது.இதற்கு 88701 31225 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

1.பெங்களூருவில் போலீசார் ரோந்து செல்வதற்கு வசதியாக 222 ‘ஒய்சாலா‘ வாகனங்கள் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
2.சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.கடந்த வருடம் 61வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 75-வது இடத்தில் உள்ளது.

உலகம்

1.இலங்கை ரிசர்வ் வங்கி ஆளுநராக இந்திரஜித் குமாரசாமி (66) நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழர் ஆவார்.
2.ஐக்கிய அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது எல்லை 21 ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்ட நாள் 05 ஜூலை 1971.

வணிகம்

1.பேமென்ட் வங்கி தொடங்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்பிஐ ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன.

விளையாட்டு

1.கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-12, 21-10 என்ற நேர்செட்டில் கொரியாவின் லீ ஹூனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 21-8, 21-14 என்ற நேர்செட்டில் கனடாவின் அட்ரியன் லியு-டாபி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இப்போட்டி கால்கேரியில் நடைபெற்றது.
2.விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் ஜெர்மனியின் அனிகா பெக் மோதினர்.இதில் செரினா வில்லியம்ஸ் 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.  இதன்மூலம் இவர், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தனது 300வது வெற்றியை பதிவு செய்தார்.