இந்தியா

1.Project 75ன்படி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். காந்தேரி (INS Khanderi) முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளதாக ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.Project 75 – பிரான்சின் DCNS உதவியுடன் 2022ம் ஆண்டுக்குள் டீசலில் இயங்கும் 6 நீர்மூழ்கி கப்பலை இந்தியாவில் உருவாக்குவது ஆகும். இதற்கான ஒப்பந்தம் 2005ல் ஏற்பட்டுள்ளது.இந்த நீர்மூழ்கி கப்பல்கள் Mazagon Dock Limited, Mumbai ஆல் உருவாக்கப்படுகின்றன.
2.“இப்பொழுது டிக்கெட் வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்” என்ற திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.இதன்படி IRCTC இணைய தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தபின் 14 நாட்கள் கழித்து பணம் செலுத்தும் வசதியை மும்பையின் இபே நிறுவனத்துடன் இணைந்து துவக்கியுள்ளது.
3.முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் செயல்படும் வங்கிகள் வாரிய குழுவின் ( Banks Board Bureau – BBB) உறுப்பினராக சுபலட்சுமி பான்ஸ் மற்றும் பிரதிப் ஷா ஆகியோரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.


உலகம்

1.ஈக்வடார் நாட்டின் அமேசான் வடிநிலப்பகுதியில் கண்ணாடி போன்ற உடலமைப்பை கொண்ட தவளை (See through glass frogs) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் விலங்கியல் பெயர் – Hyalinobatrachium yaku ஆகும்.


விளையாட்டு

1.இங்கிலாந்தில் நடைபெறும் உள்நாட்டு T20 கிரிக்கெட் போட்டித்தொடரான பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் எனப்படும் கியா லீக்கில் விளையாட முதன்முதலாக இந்தியாவைச்சேர்ந்த வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு பெற்றுள்ளார்.


இன்றைய தினம்

1.உலகச் சுற்றுச்சூழல் தினம் (World Environment Day).
உலகச் சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. எங்கு மக்கள் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச்சூழலில் வாழ்கிறார்களோ, அங்கு நன்றாக வேலை செய்வார்கள். அங்கு வாழும் குழந்தைகள் நன்கு படிப்பார்கள். சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, சுற்றுச்சூழலின்மீது தனிக்கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
2.சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்ற நாள் 05 ஜூன் 1959.

 

– தென்னகம்.காம் செய்தி குழு