Current-Affairs-Updates

இந்தியா

1.இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவை சேர்ந்த திருநங்கை அக்கை பத்மஷாலி கெவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.அமைதி மற்றும் கல்விக்கான இந்திய மெய்நிகர் பல்கலைக்கழகம் இந்த பட்டத்தை வழங்கியுள்ளது.
திருநங்கைகள் நலனுக்காகவும்,உரிமைகளுக்காகவும் ,பாதுகாப்புக்காவும் தொடர்ந்து போராடி வருவதால் இந்த உயரிய அங்கீகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுள்ளது.அக்கை பத்மஷாலி  கடந்த ஆண்டு நாட்டிலேய முதல் முறையாக ஒட்டுநர் உரிமை பெற்ற திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.இதே போல இவருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான ராஜ்யோத்சவா விருதும் வழங்கப்பட்டது.திருநங்கை ஒருவருக்கு இத்தகைய உயரிய விருது வழங்கப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
2.தொழுநோய்,மலேரியா,HIV,TB போன்ற நோய்களுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் LEPRA INDIA என்ற தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவராக நடிகர் மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3.இன்று உலக சுற்றுச்சூழல் நாள்(World Environment Day).

உலகம்

1.ரோமில் நடைபெற்ற சர்வதேச வங்கி உச்சி மாநாட்டில் கத்தார் நாட்டின் Doha வங்கியின் தலைமை செயல் அலுவலராக பணியாற்றும் R.சீத்தாரமனுக்கு Green Economy Visionary Award வழங்கப்பட்டுள்ளது.இவர் கும்பகோணத்தை சார்ந்தவர்.
2.ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியான COMPUTEX மே 31 முதல் ஜூன் 4 வரை தைபேயில் நடைபெற்றது.
3.05 ஜுன் 1956ல் இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
4.05 ஜுன் 1959 ல் சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
5.05 ஜுன் 1974ல் ஈழப்போரில் சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.