தமிழகம்

1.திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு.இதற்காக திமுகவின் விதி 18ல் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2.தமிழக இறுதி வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 92 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  தெரிவித்துள்ளார்.


இந்தியா

1.44 ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் நேற்று  பதவியேற்றுக் கொண்டார்.,மேலும் ஜே.எஸ்.கெஹர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் சீக்கியவர் ஆவார்.
2.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து டி.எஸ்.தாக்கூர் கடந்த 3-ம் தேதி  ஓய்வு பெற்றார்.இவர் 43-ஆவது தலைமை நீதிபதி ஆவார்.
3.செல்லிடப்பேசி மூலம் சுலபமாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வசதியாக, இந்தியன் வங்கியின் புதிய செயலிகள் சென்னையில் கடந்த 3-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த புதிய செயலியை ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
4.நாட்டிலேயே முதன்முறையாக பொதுமக்கள் நலனுக்காக மத்திய பிரதேச அரசு ‘மகிழ்ச்சித் துறை’ என்பதை  அறிமுகம் செய்துள்ளது.தற்போது மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் இந்த திட்டத்தை  விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
5.உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டது.உத்தர பிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் – பிப்ரவரி 11 ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் – பிப்ரவரி 15 ஆம் தேதியும், மூன்றாவது கட்டம் – பிப்ரவரி 19 ஆம் தேதியும், நான்காவது கட்டம் – பிப்ரவரி 23 ஆம் தேதியும், ஐந்தாவது கட்டம் – பிப்ரவரி 27 ஆம் தேதியும், ஆறாவது கட்டம் – மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்ட் மாநிலங்களில் பிபர்வரி 15ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக மார்ச் 4 மற்றும் 8  ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
6.நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி ஆற்றிய உரையின்போது அறிவிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.இந்த திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.இந்தியாவின் முதல் சீருடை மற்றும் சர்வதேச ஜவுளிக் கண்காட்சி(Solapur 1St uniform And Garment Manufacturers Fair 2017) மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் ஜனவரி 5 முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8.பஞ்சாப் மாநில மின் கழகம் ( Punjab State Power Corporation Ltd ), மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து விநியோகம் செய்வது வரையிலான , மின்கடத்துதல் மற்றும் விநியோகத்தில் , குறைவான அளவிலான சேதாரத்துடன் சிறப்பான மின்விநியோகத்தை மேற்கொண்டதற்கான அகில இந்திய விருதை  பெற்றுள்ளது.


உலகம்

1.பின்லாந்து நாட்டில், புத்தாண்டு தினத்தன்று, ஏழை மற்றும் வேலை இல்லாத மக்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக பணம் கொடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.2017 ஜனவரி 1-ம் தேதி முதல் 2019 டிசம்பர் 31-ம் தேதி வரை, மாதந்தோறும் 2,000 பேருக்கு, ஏறக்குறைய 560 யூரோ [ $ 587 அதாவது இந்திய ரூபாயில் 40,300 ] வழங்க பின்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக வேலை இல்லாதவர்களை மீண்டும் வேலைக்குச் செல்ல வைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.மேலும் வேலை கிடைக்கவில்லை என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பணம் வழங்கப்போவதில்லை என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
2.சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ள யுவு நகரில் இருந்து லண்டன் நகருக்கு ஜனவரி 02-ம் தேதி சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.கஜகஸ்தான், ரஷ்யா, பெலாராஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக 12 ஆயிரம் கி.மீ., துாரம் கடந்து பிரிட்டனின் லண்டன் நகரை அடைகிறது.


விளையாட்டு

1.பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாக 34 வயதான மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று கொழும்பில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந் தேதி தொடங்க உள்ளது.
2.இங்கிலாந்துக்கு எதிராக இந்த மாதம் நடைபெற உள்ள 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியுள்ளார். இத்தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போனில் உலகின் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்ற நாள் 05 ஜனவரி 1971.
2.வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்ட நாள் 05 ஜனவரி 1896.
3.பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்ட நாள் 05 ஜனவரி 1940.
4.இன்று மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்  மம்தா பானர்ஜி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 05 ஜனவரி 1955.

 

– தென்னகம்.காம் செய்தி குழு