Current-Affair-Logo

தமிழகம்

1.முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் சென்னை தண்டையார்பேட்டையில் ரூ.2 கோடியில் ‘அம்மா சுற்றுச்சூழல் பூங்கா’ அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2.இன்று விடுதலைப் போராட்ட வீரர்  வ. உ. சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி  05 செப்டம்பர் 1872.

இந்தியா

1.இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். இவர்  திருத்தணியில் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் ஏழை தெலுங்கு நியோகி பிராமண குடும்பத்தில்  பிறந்தார்.தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.தத்துவவியல் முதுகலைப் பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். பல்வேறு தத்துவங்களை கற்று அறிமுகப்படுத்தினார். தத்துவ மேதையான அவர் எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்றார். 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இவர் 1952-62 காலகட்டத்தில் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.அதன்பின் நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை அவர் ஜனாதிபதியாக இருந்தார்.தனது 86வது வயதில், அதாவது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் காலமானார்.
2.புனேவில் காவலர்களாக பணிபுரிந்துவரும் தினேஷ், தாராகேஷ்வரி தம்பதி உலகிலேயே மிகப் பெரிய சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளதாக போலியான புகைப்படத்தைக் காண்பித்து, சான்றிதழ்களை பெற்றதாகக் கூறி நேபாளத்தில் உள்ள எந்தவொரு சிகரத்திலும் அடுத்த 10 ஆண்டுகள் ஏறுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
3.இந்தியா துணை இராணுவ அமைப்பு – Central Reserve Police Force (CRPF) ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ‘கமாண்டண்ட்” அந்தஸ்து வழங்கியதோடு விளம்பர தூதுவராகவும் நியமித்துள்ளது.
4.ஹரியான மாநிலம் குருசஷத்திரா மாவட்டம் , Pehowa நகருக்கு அருகில் அமைந்துள்ள Gumthala Garhu என்ற கிராமத்தில் முதன்முறையாக இலவச Wifi வசதி, 10mbps வேகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
5.சி பிரிவைச் சேர்ந்த வேளாண் சாராத பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.350-ஆக மத்திய அரசு அதிகரித்துள்ளது.இப்போது தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.246-ஆக உள்ளது.

உலகம்

1.இன்று  அன்னை தெரேசா நினைவு தினம்.இவர் இறந்த தேதி 05 செப்டம்பர் 1997.
2.இன்று  சர்வதேச கருணை தினம் (International Day of Charity).
குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5 ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
3.பாப்புவா நியு கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்  MANUS தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமை மூடுவதாக அறிவித்துள்ளன.
4.ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்ட நாள் 05 செப்டம்பர் 1880.