இந்தியா

1.இந்தியக் கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டிடம் இருந்து பாரக் ரக நவீன ஏவுகணைகளை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 03-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
2.இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (The Federation of Indian Export Organisations) புதிய தலைவராக கணேஷ் குமார் குப்தா மற்றும் துணை தலைவராக சென்னையை சேர்ந்த M. ரபீக் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
3.சாசெக் – South Asia Subregional Economic Cooperation ( SASEC) தெற்காசிய நாடுகளின் துணை பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு புது டெல்லியில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
4.குஜராத் மாநிலத்தின் முதல் பெண் காவல் துறை தலைமை இயக்குநராக கீதா ஜோஹ்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த ஏப்ரல் 02-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரான லெனின் மொரீனோ வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.2016-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் விருதுக்கு இந்திய ஸ்குவாஷ் பயிற்சியாளர் சைரஸ் போன்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2.சர்வதேச ஊக்கமருந்து தடுப்புக் கழகத்தின் 2015-ம் ஆண்டுக்கான ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில்  ரஷ்யா முதலிடம் (176 வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்) பிடித்துள்ளது.இத்தாலி (129 வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இந்த  பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக மூன்றாவது (117 வீரர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்) இடத்தை பிடித்துள்ளது.


இன்றைய தினம்

1.கேரளாவில் பொதுவுடமை கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்த நாள் 05 ஏப்ரல் 1957.
2.அக்காஷி- கைக்கியோ பாலம், உலகின் மிகப்பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்ட நாள் 05 ஏப்ரல் 1998.
3.முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவான நாள் 05 ஏப்ரல் 1804.
4.மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்த நாள் 05 ஏப்ரல் 1930.

 

– தென்னகம்.காம் செய்தி குழு