தமிழகம்

1.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரத்துக்கு அடுத்தபடியாக, ஆன்லைன் முறையில் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறை மதுரை மாநகராட்சியில் தொடங்கியுள்ளது.
2.சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலை கடந்த ஆகஸ்டு 02-ஆம் தேதி நள்ளிரவில் தமிழக அரசால் அகற்றப்பட்டது.அந்த சிலை புதிதாக கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தில் நிறுவப்பட உள்ளது.
3.தமிழ்நாடு எரிசக்தி நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (பவர் ஃபின்) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக விக்ரம் கபூர் நியமிக்கப்படுள்ளார்.


உலகம்

1.ரஷ்யா மீது கொண்டு வந்துள்ள பொருளாதார தடை மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.


விளையாட்டு

1.பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய மகளிர் கூடைப்பந்து கோப்பையின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.


இன்றைய தினம்

1.1914 – ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

 

– தென்னகம்.காம் செய்தி குழு