Daily-Current-Affairs

தமிழகம்

1.தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பழங்குடியினருக்கு தமிழக உள்ளாட்சித் தேர்தலில் உரிய இடம் ஒதுக்கப்படவில்லை என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.மேலும், டிசம்பர் 30ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும்,உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
2.சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக என். சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.இன்று இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 05 அக்டோபர் 1823.

இந்தியா

1.அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள  சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே நேற்று சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பின் போது தொழில்நுட்பக் கல்வி, திறன் வளர்ப்பு உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

உலகம்

1.பிரிட்டனை பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் 3 பேருக்கு 2016-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.டேவிட் தௌலஸ், டங்கன் ஹால்டனே மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூவருக்கும் வழங்கப்படுகிறது.மேலும் பரிசுத் தொகையின் பாதித் தொகை டேவிட் தௌலஸ்க்கும், மீதித் தொகை மற்ற இருவருக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன.
2.தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான 16 வயது சிறுமி கியாரா நிர்கின்க்கு ஆரஞ்சு பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் நிலத்தில் நீரைத் தக்கவைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெற முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்.இதற்காக கூகுள் அறிவியல் கண்காட்சி விருது இவருக்கு வழங்கப்படுகிறது.கூகுள் தங்கள் அறிவியல் கண்காட்சி விழாவில் 50,000 டாலர்கள் உதவித்தொகையை பரிசாக வழங்கவுள்ளது.இவர் 11-ம் வகுப்பு பயிலும் மாணவியாவார்.
3.சீனாவின் உள்ள ஹுபேய் மாகாணத்தில் உள்ள ஹேப்பி வேல்லி பொழுதுப்போக்குப் பூங்காவில் மலேசியா நாட்டைச் சேர்ந்த மேஜிக் பெண் அவேரி சின் மற்றும் சில்வியா லிம்  ஒரே நிமிடத்தில் 18 முறை உடைகளை மாற்றி புதிய உலக சாதனை புரிந்துள்ளனர்.மேடையின் தோன்றும்போது அணிந்திருந்த உடையுடன் சேர்த்து மொத்தம் 19 உடைகளில் தோன்றினார்.ஒரே நிமிடத்துக்குள் இந்த சாகச நிகழ்ச்சியை செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
4.இன்று உலக ஆசிரியர்கள் தினம் (World Teacher’s Day).
ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும். உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க யுனெஸ்கோ 1994 ஆம் ஆண்டில் அக்டோபர் 5 ஐ உலக ஆசிரியர் தினமாக அறிவித்தது. ஒரு நல்ல சமூகத்தை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இத்தினம் கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனைச் சிறப்பிக்கும் விதமான அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறது.

வர்த்தகம்

1.சீனாவைச் சேர்ந்த லெனோவோ நிறுவனம் மடிக்கணினிகளை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.லெனோவோ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் தினேஷ் நாயர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

10.இன்று சிவகங்கை மாவட்டம்.

சிவகங்கை மாவட்டமானது 1984 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தினைப் பிரித்து உருவாக்கப்பட்டது.இம்மாவட்டமானது 15.3.1985 முதல் செயல்படத் தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. காரைக்குடி இம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
இம்மாவட்டத்தின் வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், வடக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தென் கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென் மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
வேட்டங்காடு பறவைகள் சரணாலயம்,செட்டிநாடு,பாண்டியர் கோயில்கள்,அழகமாநகரி அருள்மிகு ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் கோவில்,அழகமாநகரி ஸ்ரீ சந்தி வீரண் கோவில்,திருமலை மலை கொழந்து ஈஸ்வர் கோவில்,நாமனூர் லெட்சுமிபுரம் ஸ்ரீ கரடிசாமி கோவில் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன.