தமிழகம்

1.2017க்கான அவ்வையார் விருது அகில இந்திய மாதர் சங்க தலைவி, பத்மா வெங்கட்ராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.30 ஆண்டுகளுக்கும் மேலாக, மகளிர் நலம் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்காக, அவர் ஆற்றி வரும் பணிக்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது.இவ்விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், எட்டு கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் உடையது.
2.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.வருகிற 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.


இந்தியா

1.முத்தலாக் வழக்கு விசாரணைகளில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அமைச்சருமான சல்மான்குர்ஷித்தை நடுநிலை அறிவுரையாளராக (Amicus Curiae) நியமித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெகர் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2.உயர் பணமதிப்பு நீக்கத்தை தொடர்ந்து, ரொக்க பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்க ICICI வங்கி நாடுமுழுவதும் 100 நாட்களில் 100 கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மாற்றியுள்ளது.2017 இறுதிக்குள் மேலும் 500 கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மாற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


உலகம்

1.உலகின் மிக வயதான மனிதரான இந்தோனேஷியாவைச் சேர்ந்த 146 வயது சோடிமெட்ஜோ மரணமடைந்தார்.இந்தோனேசியாவில் 1900-ம் ஆண்டில்தான் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறை தொடங்கப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்களில் தவறுகளும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.இருந்தபோதிலும் சோடிமெட்ஜோ அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது வயது 146 என்பது உண்மை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உறுதிபடுத்தப்பட்ட ஆவணங்களின் படி பார்த்தால் 122 வயதில் இறந்த பிரான்சு நாட்டின் ஜீன் கால்மெண்ட்தான் உலகின் நீண்ட காலம் வாழ்ந்த மனிதராக இருந்திருக்கிறார்.


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச தீயணைக்கும் படையினர் நாள் (International Fire Fighter’s Day).
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட நாள் 04 மே 1904.

 

– தென்னகம்.காம் செய்தி குழு