தமிழகம்

1.முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று  நடைபெற்றது.
2.உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.உத்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும்,மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.இந்த தகவலை இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


இந்தியா

1.ஹைதராபாத்தை சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற சிறுவன் தனது 11-வது வயதிலேயே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
2.சென்னை தாம்பரத்தில் உள்ள விமான படை தளத்துக்கு இந்த ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது வழங்கும் விழாவில்  பிரணாப் முகர்ஜி நேற்று கலந்து கொண்டார்.பின்னர் இயந்திரவியல் பயிற்சி மையத்திற்கு விருது வழங்கி கவுரவித்தார்.


விளையாட்டு

1.சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் வீரர் டுவைன் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இன்றைய தினம்

1.சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்த நாள் 04 மார்ச் 1275.
2.எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்த நாள் 04 மார்ச் 1877.
3.பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்ட நாள் 04 மார்ச் 1882.
4.இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட நாள் 04 மார்ச் 1931.
5.ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆன நாள் 04 மார்ச் 1959.
6.கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்ட நாள் 04 மார்ச் 1994.
7.பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்த நாள் 04 மார்ச் 2006.
8.அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்ட நாள் 04 மார்ச் 2006.

 

– தென்னகம்.காம் செய்தி குழு