தமிழகம்

1.தமிழக அரசின் சார்பில் கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.பதக்கங்களை பெற்றவர்களின் விபரங்கள்:
1.வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் – வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த வி.துர்காதேவிக்கு வழங்கப்பட்டது.
2.மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது – வேலூரைச் சேர்ந்த மருத்துவர் அ.மு.இக்ரம்க்கு வழங்கப்பட்டது.
3.வேளாண் விருது – நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த ம.சங்கரநாராயணன்க்கு வழங்கப்பட்டது.
உத்தமர் காந்தியடிகள் பதக்கங்களை பெற்றவர்களின் விபரங்கள்:
01) நாகை மதுவிலக்கு அமல்பிரிவு ஏடிஎஸ்பி பி.தங்கதுரை,
02) சென்னை மத்திய புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி கே.ஜீவானந்தம்,
03) அடையாறு மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் இ.வேலு,
04) நாகை மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்ஐ கே.ரமேஷ்குமார்,
05)தருமபுரி மாவட்டம் தொப்பூர் எஸ்எஸ்ஐ வி.மாதப்பன்.


இந்தியா

1.டெல்லியில் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழாவில் அசோக சக்ரா விருது,உத்தம் யுத் சேவா விருது,ஷாவ்ரிய சக்ரா விருது மற்றும் கீர்த்தி சக்ரா விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.பதக்கங்களை பெற்றவர்களின் விபரங்கள்:
அசோக சக்ரா விருது பெற்றவர்களின் விபரங்கள்:
1. ஹவில்தார் ஹங்பான் தாதா (இவர் இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமென்டில் பணியாற்றினார், இறப்புக்கு பிறகு இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது).
[ இந்த விருதினை ஹவில்தாரின் மனைவியான சேஸன் லாவாங்குவிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார் ].
கீர்த்தி சக்ரா விருது பெற்றவர்களின் விபரங்கள்:
1. மேஜர் ரோகித் சூரி – 4ஆம் பிரிவு (சிறப்பு அதிரடிப்படை)
2. ஹவில்தார் பிரேம் பகதூர் – கூர்க்கா பிரிவு (இறப்புக்கு பிறகு வழங்கப்பட்டது).
உத்தம் யுத் சேவா விருது பெற்றவர்களின் விபரங்கள்:
1. ஷ்ரவண் குமார்
2. ராஜேந்திர ராம்ராவ் நிம்போர்கர்.
3. சதீஷ் துவா
4. தேவராஜ் அன்பு
5. அபய் கிருஷ்ணா
(இவர்கள் 5 பேரும் லெப்டினன்ட் ஜெனரல்கள் ஆவர்.)
ஷாவ்ரிய சக்ரா விருது பெற்றவர்களின் விபரங்கள்:
1. லெப்டினன்ட் கர்னல் அதுல் குப்தா, மகார்.
2. மேஜர் டி.வினய் ரெட்டி, சென்னை.
3. மேஜர் ரஜத் சந்திரா (4-வது பிரிவு – சிறப்பு அதிரடிப்படை)
4. மேஜர் தீபக் குமார் உபாத்யாயா (9-வது பிரிவு – சிறப்பு அதிரடிப்படை)
5. கேப்டன் அசுடோஷ் குமார் (4-வது பிரிவு- சிறப்பு அதிரடிப்படை )
6. கேப்டன் ஆசிக் -கூர்க்கா பிரிவு.
7. சுபேதார் விஜய்குமார்- (4-வது பிரிவு சிறப்பு அதிரடிப்படை)
8. ஹவில்தார் ஹனுமன் ராம் சரண்.
9. நாயக் கவாடே பாண்டுரங் மகாதேவ் (இறப்புக்கு பின்பு)
10. அப்துல் கயூம் (9-வது பிரிவு சிறப்பு அதிரடிப்படை)

2.வருமான வரித்துறை உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு , வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் உள்ள கருப்பு பணத்தை கண்டுபிடிக்க Operation Clean Money என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
3.டாக்டர்.விஜய் பாண்டுரங் பட்கர் நாளந்தா பலகலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்களான பரம் வரிசை கம்ப்யூட்டர்கள் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.
4.26 ஜனவரி 2017ல் கொண்டாடப்பட்ட 68வது குடியரசு தின விழாவின் கருப்பொருள்கள் (Themes) – திறன் இந்தியா மற்றும் பெண் குழந்தைகளை காப்போம் , பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம் (Skill India & Beti Bachao Beti Padhao).


வர்த்தகம்

1.உலகின் முன்னணி பங்குச் சந்தைகளுள் ஒன்றான தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ.) புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக விக்ரம் மாயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.முன்னதாக தலைமைப் பொறுப்பில் இருந்த சித்ரா ராமகிருஷ்ணா திடீரென பதவி விலகினார்.இதையடுத்து விக்ரம் மாயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தயார்ப்படுத்துவதற்கும், அவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளிப்பதற்கும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் 10 பேர் கொண்ட சிறப்புக்குழுவை அமைத்துள்ளது.கடந்த 2012 ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூட்டில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா,இக்குழுவிற்கு தலைவராக பணியாற்றுவார்.P.T. உஷா,பிரகாஷ் படுகோனே, கர்ணம் மல்லேஸ்வரி உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவரான லூ ரோவன் (91), சிட்னியில் நேற்று காலமானார்.


இன்றைய தினம்

1.இன்று உலகப் புற்றுநோய் தினம் (World Cancer Day).
உலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக யாசர் அரபாத் பதவியேற்ற நாள் 04 பிப்ரவரி 1969.
3.இன்று இலங்கை விடுதலை அடைந்த நாள்.விடுதலை அடைந்த தேதி 04 பிப்ரவரி 1948.
4.ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்ட நாள் 04 பிப்ரவரி 1789.
5.இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை சிலோன் ஒப்சேர்வர் முதன் முதலாக வெளியிடப்பட்ட நாள் 04 பிப்ரவரி 1834.
6.ஒலியை மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய “பிரமாஸ்” ஏவுகணை ஒரிசா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட நாள் 04 பிப்ரவரி 2007.

 

– தென்னகம்.காம் செய்தி குழு