current2

தமிழகம்

1.எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் எம்.ஆர். ராதாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட நாள் 04 நவம்பர் 1967.

இந்தியா

1.இந்திய வேளாண் ஆய்வு மையம் நாட்டின் பருப்பு விளைச்சலை அதிகரிக்க புதிய வீரிய ரக பருப்பு விதைகளை உருவாக்கியுள்ளது.இதற்கு பூசா 16 என பெயரிடப்பட்டுள்ளது.வழக்கமான பருப்பு வகைகள் 6 முதல் 9 மாதங்கள் வரை காலம் எடுத்துக் கொள்ளும்.ஆனால் புதிய பருப்பு ரகமானது நான்கு மாதங்களில் அறுவடை செய்யக் கூடியதாகும்.
2.பண மோசடி மற்றும் திருட்டுகளைத் தடுக்க பயோமெட்ரிக் எனப்படும் கைரேகை அல்லது கண் கருவிழி மூலம் வங்கி ATMகளில் பணம் எடுப்பது உள்ளிட்ட கார்டு பரிவர்த்தனை வசதியை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

உலகம்

1.ஜப்பான் நாட்டில் வானிலை சம்பந்தமான நிலவரங்களை அறிவதற்காக அதிநவீன முறையில் உருவாக்கப்பட்ட Himawari-9 செயற்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.இந்த செயற்கைக் கோளை Mitsubishi கனரக தொழிற்சாலைகள் மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளன.இந்த செயற்கைக் கோள் H-2A ராக்கெட் மூலம் Tanegashima விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
2.வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 04 நவம்பர் 1861.
3.இன்று சர்வதேச குடிமகன்கள் தினம் (World Citizen Day).