current-affairs

இந்தியா

1.வங்கி அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதி விரைவில் ரயில் நிலைய கவுன்டர்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.வாட்ஸ்அப் மெசேஞ்சர் சேவை இனி பிளாக்பெரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெரி 10, நோக்கியா S40, நோக்கியா சிம்பயான் S60, ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2, விண்டோஸ் போன் 7, ஐபோன் 3GS / ஐஓஎஸ் 6 ஆகிய இயங்கு தளங்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஆப்கானிஸ்தான் நாட்டின் நலனை மையமாக கொண்டு நடைபெறும் ‘ஆசியாவின் இதயம் மாநாடு’  நேற்று தொடங்கியது.
4.புதுடில்லி காவல்துறை Go To School என்ற திட்டத்தை சமூக ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வை பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
5.UNESCO Salon Youth Video Competition 2016ல் சிறந்த குறும்படத்திற்கான விருதை Toonz Media Group தயாரித்துள்ள Magical Piano வென்றுள்ளது.
6.இந்தியாவில் வாழும் 75 சதவீத புற நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.’இந்தியாவின் சுகாதாரம் மற்றும் நோய்தன்மை: 2004 – 2014′ என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
7.மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் மும்பையில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான “சைத்ய பூமி’யை முதல் தரமான புனித யாத்திரைத் தலம் மற்றும் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
8.மத்திய புலனாய்வு செயலகத்தின் (சி.பி.ஐ)  இடைக்கால இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்படுவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

1.சீனாவைச் சேர்ந்த வூஷுவான் குழுமம் டைட்டானிக் கப்பலின் முழு அளவு மாதிரி கப்பலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2.அமெரிக்காவின் அதிபராக விரைவில் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு நியூயார்க் நகர நிர்வாகம் நாளொன்றுக்கு 10 லட்சம் டாலர் செலவிடுகிறது.

விளையாட்டு

1.இந்த சீசனின் ஃபார்முலா 1 கார் பந்தய சாம்பியனான ஜெர்மனியின் நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு பெறுவதாக தனது முடிவை அறிவித்துள்ளார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று இந்தியாவின் கடற்படையினர் தினம்.
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின்பொழுது இந்திய கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படை நடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது.இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது.
2.ஐ.நா. சபையில் அமெரிக்கா இணையவதற்காக செனட் சபையில் ஒப்புதல் அளித்த நாள் 4 டிசம்பர் 1945.
3.ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பிய நாள் 4 டிசம்பர் 1959.