இந்தியா

1.அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தஹி சில நாட்களுக்கு முன்பு பதவி விலகியதால் புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு, சிறந்த குடியேற்றவாசி விருது வழங்கப்பட உள்ளது.அடோப் தலைவர் சாந்தனு நாராயண், முன்னாள் அமெரிக்க சர்ஜன் ஜெனரல் விவேக் மூர்த்தி ஆகியோர் இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
2.லண்டனில் நடந்த மென்ஸா ஐ.கியூ தேர்வில், இங்கிலாந்தின் ரீடிங் நகரில் வசிக்கும் 11 வயது இந்திய சிறுவன் அர்னவ் ஷர்மா 162 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.விஞ்ஞானிகள், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றவர்களை விட அர்னவ் கூடுதலாக 2 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.


விளையாட்டு

1.தாய்லாந்தில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த சாய்லஷனா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
2.1827 – நியூயார்க் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
3.1837 – உலகின் முதலாவது அதிதூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு