இந்தியா

1.இந்திய ரயில்வே தான் வெளியிடும் மாசு (Pollution) அளவை 2030ம் ஆண்டுக்குள் 33% அளவு குறைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
2.பிரசார் பாரதி அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக சஷி சேகர் வேம்பட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


உலகம்

1.அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி பதவி விலகியதையடுத்து ஆளும் கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளி மருத்துவர் லியோ வரத்கர்(38), அயர்லாந்தின் பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
அயர்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்க இருக்கிறது.


விளையாட்டு

1.தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் , இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறியுள்ளார் .


இன்றைய தினம்

1.ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் (International Day of Innocent Children Victims of Aggression).
இனக்கலவரம், மதக்கலவரம், போர், வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும், பெண்களும் தான். போரின்போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
2.முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்ட நாள் 04 ஜூன் 1917.

 

– தென்னகம்.காம் செய்தி குழு