current-affairs

தமிழகம்

1.இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. வே. சு. ஐயர் இறந்த நாள்.வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்தியா

1.மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் “பஞ்சாப் மெயில்”, தனது 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.தற்போது இந்த ரயில் 34 மணி நேரத்தில் (1,930 கி.மீ. தூரம்)  மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூருக்கு சென்றடைகிறது.
2.ஒடிசா மாநிலத்தில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவரையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
3.இன்று இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  4 ஜூன் 1946.
4.இன்று இந்தியத் தொழில் அதிபர் அனில் அம்பானி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி  4 ஜூன் 1959.

உலகம்

1.குத்துச்சண்டை போட்டிகளின் முடிசூடா மன்னன் ’தி கிரேட்’  முகமது அலி இன்று மரணம் அடைந்துள்ளார்.
2.4 ஜுன் 1896ல் பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.

விளையாட்டு

1.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ்- மார்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.சானியா மிர்ஸா-இவாண்டோடிக் ஜோடியை 4-6, 6-4, 10-8 என்ற கணக்கில் பயஸ்-ஹிங்கிஸ் ஜோடி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை முருகுசா அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சை 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முருகுசா பட்டம்  வெல்வது இதுவே முதன்முறை.