தமிழகம்

1.சிறு வயதில் ஆதார் அட்டை எடுத்திருந்தால் 15 வயது பூர்த்தியடைந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்தியா

1.திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நேற்று அறிவியல் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி  தொடங்கி வைத்தார்.
2.மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தலைவராக டேவிட் ஆர்.ஷியாம்லே நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த ஜனவரி 2-ம் தேதி பிறப்பித்துள்ளார்.அல்கா சிரோஹியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து  டேவிட் ஆர்.ஷியாம்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
3.ஓட்டல்களில் சேவைக் கட்டணம் செலுத்துவது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.வாடிக்கையாளர்கள் விரும்பினால் தானாக முன் வந்து சேவை கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து டி.எஸ். தாக்குர் நேற்று ஓய்வு பெற்றார்.
5.இந்தியாவிலேயே முதன்முறையாக குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஷாம்லாஜி ( Shamlaji ) என்ற இடத்தில் லேசர் தொழில் நுட்பத்தில் இயங்ககூடிய, வட்டார போக்குவரத்து துறையின் தானியங்கி வாகன தணிக்கை சாவடியை அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.


உலகம்

1.2017-ம் ஆண்டின் முதல் குழந்தை சரியாக 00.01 மணிக்கு பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது.பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.
2.தொழிலாளர்கள் அலுவலக நேரம் தவிர்த்து ஓய்வு நேரங்களில் தங்கள் அலுவலக மெயில்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
3.ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு,இந்தியாவில் இருந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டுகள் தடையை நீக்கிக் கொண்டுள்ளது.முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆண்டுகளுக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
4.பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் காமர் பாஜ்வா மற்றும் Joint Chiefs of Staff Committee தலைவர் ஜூபைர் ஹயத் ஆகியோருக்கு அந்நாட்டின் அதிபர் மமூன் ஹூசைன் , அந்நாட்டின் உயரிய விருதான Nishan-e-Imtiaz ஐ வழங்கி கவுரவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக Mian Saqib Nisar பதவியேற்றுள்ளார்.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட ஃபாலி எஸ். நாரிமனுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவான் என்பவரை நியமித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்றைய தினம்

1.இன்று ஐசக் நியூட்டன் பிறந்த தினம் (Isaac Newton’s Birth Day).
ஐசக் நியூட்டன் 1643ஆம் ஆண்டு ஜனவரி 4இல் இங்கிலாந்து நாட்டில் உல்சுதோர்ப் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார். ஈர்ப்புவிசை பற்றிய ஆய்வுகள் மூலம் உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒரு­வராகக் கொண்டாடப்படுகிறார். இவரின் இயக்க விதியை நியூட்டன் விதி என்று அழைக்கின்றனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் அறிவியலில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.
2.இன்று மியான்மர் (மியான்மார்) அல்லது பர்மா, பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்.விடுதலை அடைந்த தேதி 04 ஜனவரி 1948.
3.யூட்டா 45-வது மாநிலமாக அமெரிக்காவுடன் இணைந்த நாள் 04 ஜனவரி 1896.
4.சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்க அரசுக்கு விலைக்கு விற்ற நாள் 04 ஜனவரி 1847.
5.கேப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்த நாள் 04 ஜனவரி 1854.
6.முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக்-1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் விழுந்த நாள் 04 ஜனவரி 1958.
7.லூனா-1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆன நாள் 04 ஜனவரி 1959.

 

– தென்னகம்.காம் செய்தி குழு