current-affairs

தமிழகம்

1.அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் 04 செப்டம்பர் 1978.

இந்தியா

1.சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த  7 வயது மலையேற்ற வீராங்கனை எட்வினா மத்திய அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் துாதராக நியமிக்கப்படுள்ளார்.
2.கடந்த இருமாதங்களாக  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு பெல்லட் ரக தோட்டாக்களுக்குப் பதிலாக பாதுகாப்பு படையினர் இனி மிளகாய் பொடி நிரப்பப்பட்ட “பவா குண்டுகளை” (Pava Shells) பயன்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
3.இந்தியாவின் முதல் மாநிலமாக ஜார்க்கண்ட் அரசு பொது நிதி மேலாண்மை அமைப்பை (PFMS – Public Fund Management System) செயல்படுத்தியுள்ளது.
4.பீகாரில் கங்கை நதியில் வெள்ளம் ஏற்பட காரணமாக இருக்கும் வண்டல் படிமங்களை ஆராய மத்திய அரசு ஏ கே சின்ஹா தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.இந்த குழு 10 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

உலகம்

1.வாடிகனில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விழாவில் அன்னை தெரசாவை புனிதராக கத்தோலிக்கர்களின்  மதகுரு போப் பிரான்சிஸ் இன்று  அறிவித்தார்.
2.பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கிர்தின் நித்தியானந்தம் மிகவும் தீவிரமான, மருந்துகளுக்குக் கட்டுப்படாத மார்பகப் புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.மனநிலை பாதிப்பு (அல்ஸீமர்) நோயை முன்கூட்டியே கண்டறியும் சோதனை முறையைக் கண்டு பிடித்ததற்காக கடந்த ஆண்டு இவருக்கு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3.காபோன் (Gabon)  புதிய அதிபராக அலி போங்கோ ஆண்டிம்பா தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு 7 ஆண்டுகளுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.
4.தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்ற நாள் 04 செப்டம்பர் 1888.
5.கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்ட நாள் 04 செப்டம்பர் 1951.