உலகம்

1.காச நோய் புதிய முறை ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ என பெயரிட்டுள்ளனர்.தற்போது வரை, ரத்த மாதிரிகள் வழங்கப்பட்டு 3 நாட்கள் அல்லது ஒரு வாரம் கழித்து தான் அறிந்து கொள்ளும் வசதி இருந்து வந்தது.
2.ஸ்பெயின் நாட்டில் மக்களின் இறப்புக்கு ஏற்ப குழந்தைகள் பிறப்பில் சமநிலை இல்லாததால் கிடுகிடுவென சரிந்துவரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தம்பதியருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி, தாம்பத்தியத்தை ஊக்குவிக்க செக்ஸ் மந்திரியாக எடெல்மிரா பரெய்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.


விளையாட்டு

1.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய ஸ்பெயினின் ரபெல் நடாலை 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  இங்கிலாந்து வீராங்கனை ஜொஹன்னா கோன்டா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய டென்மார்கின் கரோலின் வோஸ்னியாக்கியை  6-4, 6-3  என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
2.இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் PV சிந்து,ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தி [ 21-19, 21-16 புள்ளிகள் ] சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் டென்மார்க் வீரர் விக்டர் அலெக்சென் ( Viktor Axelsen ) , தைவானின் சோடீன்சென் ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
3.ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா நகரில் ஷார்ஜா மாஸ்டர் செஸ் போட்டி தொடரில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீநாத் நாராயணன் ஸ்பெயின் வீரரை வீழ்த்தியதின் மூலம் செஸ் விளையாட்டில் இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டரானார்.
4.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவில் காப்ரியலா டப்ரோவ்ஸ்கி – ஜு யிபான் ஜோடி 6-4, 6-3 என்ற  நேர்செட்கணக்கில்  இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.


இன்றைய தினம்

1.இன்று மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 04 ஏப்ரல் 1855.
2.உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட நாள் 04 ஏப்ரல் 1581.
3.அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்ட நாள் 04 ஏப்ரல் 1968.
4.உலக வர்த்தக மையம் நியூயோர்க் நகரில் நிறுவப்பட்ட நாள் 04 ஏப்ரல் 1973.

 

– தென்னகம்.காம் செய்தி குழு