இந்தியா

1.காவிரியில் கழிவுநீர் கலப்பது பற்றி ஆராய மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி R.M. பரத்வாஜ் தலைமையில் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இக்குழுவில் தமிழக அரசின் சார்பில் S.செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2.ப்ளூம்பெர்க் ஆசிய பணக்காரர் பட்டியல் அடிப்படையில் ஆசிய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உருவாகியுள்ளார்.
3.மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி 2016-ம் ஆண்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தவர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


உலகம்

1.ஈரான் நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய அதிபர் ரவுஹானி மீண்டும் அதிபராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்


சிறப்பு செய்திகள்

வரும் ஆண்டுகளில் ஒலிம்பிக் நடைபெறும் இடம் மற்றும் ஆண்டு

2020 – டோக்கியோ (ஜப்பான்).
2024 – பாரிஸ் (பிரான்ஸ்).
2028 – லாஸ் ஏஞ்செல்ஸ் (அமெரிக்கா).


இன்றைய தினம்

1.இன்று சர்வதேச பீர் தினம் (International Beer Day).
சர்வதேச பீர் தினம் 2007ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ், கலிபோர்னியாவில் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. தற்போது உலகின் 50 நாடுகளில் 207 நகரங்களில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. பீர் நண்பர்களை ஒன்று சேர்க்கிறது. அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் கொண்டாடுவதன்மூலம் பீர் பாதைகளின் கீழ் உலகம் ஐக்கியம் ஆகிறது என இத்தினத்தைக் கொண்டாடுபவர்கள் கூறுகின்றனர்.
2.1693 – சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.
3.2007 – நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு