Daily-Current-Affairs

இந்தியா

1.சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று ஒரு மனதாக நிறைவேறியது.
2.தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் சேவைகள் தொடர்பான புகார்களை இனி ட்விட்டர் மூலமே தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் சேவைகள் தொடர்பாக புகார் தர விரும்புவோர் அதை, @manojsinhabjp#TwitterSeva என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

உலகம்

1.நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.இவர் நேபாளத்தின் 39-ஆவது பிரதமர் ஆவார்.
2.இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 04 ஆகஸ்டு 1961.இவர் ஹவாய் தீவில் பிறந்தார்.

விளையாட்டு

1.ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு ரியோ நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி பல்வேறு நாடுகள் வழியாக ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை அறிவிக்கும் முதல் அம்சம், ஒலிம்பிக் தீப ஓட்டம். இந்தத் தீபம் ஏற்றப்பட்டது முதல் போட்டிகள் முடியும்வரை எங்கும் தடைபடாமல், அணைக்கப்படாமல் வைக்கப்படுகிறது.