இந்தியா

1.தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக அந்தோணி லியான்ஸு யாலா நியமிக்கப்பட்டுள்ளார்.வட கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
2.உத்தரப்பிரதேச அரசு, மாடுகளுக்காக “கவுவான்ஸ் சிகிட்சா மொபைல் வேன்கள்” என்னும் பெயரில் பிரத்யேக ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளது.
3.பொது கணக்குக் குழுவின் புதிய தலைவராக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்றுக்கொண்டார்.
4.அந்தமான் நிகோபார் தீவுகளில் தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3-ம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக நடத்தியது.


உலகம்

1.இந்தியாவைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் டினா சிமாடா, இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் ஒளி ஜோதியை ஏற்றியுள்ளார்.


இன்றைய தினம்

1.இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம் (World Press Freedom Day).
பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973ஆம் ஆண்டு மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவித்தது. அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. மேலும் பத்திரிகையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்கிறது.
2.இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா வெளியான நாள் 03 மே 1913.
3.பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்ட நாள் 03 மே 1941.

 

– தென்னகம்.காம் செய்தி குழு