இந்தியா

1.இனி மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தாலோ அல்லது பணத்தை எடுத்தாலோ குறைந்தப்பட்சம் ரூ.150 கட்டணமாக தனியார் வங்கிகள் வசூலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2.இந்தியாவின் மும்பை நகரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் கட்டப்பட்டு வருகின்றன.இரண்டு நீர்மூழ்கிகள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்நிலையில் மேற்கண்ட நீர்மூழ்கிகளில் ஒன்றான ஐ.என்.எஸ் கல்வாரி-யில் இருந்து ஏவுகணைகள் மூலம் எதிரி நாட்டின் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் சோதனை அரபிக்கடலில் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
3.ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றக் கட்டிடத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று திறந்து வைத்தார்.
4.மூத்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான பரத் சிங் ராவத் (84) ராவத் கோட்வாரில் காலமானார்.
5.பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வர்த்தகம்

1.டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவான டிவிஎஸ் ரிகோ சப்ளை செயின் சர்வீசஸ், இங்கிலாந்தை சார்ந்த எஸ்பிசி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
2.வாட்டர் ஹீட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீனஸ் நிறுவனம் மின் விசிறிகளுக்கான சந்தையில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் 65 வேறுபட்ட மாடல்களை சென்னையில் நேற்று அறிமுகம் செய்துள்ளது.இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் உள்ளது.


உலகம்

1.வங்காளதேசத்தில் புதிய திருமண சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும், பெண்களுக்கு 14 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் (Alexander Graham Bell Birth Anniversary Day).
கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3 அன்று ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் பிறந்தார். இவர் 1876ஆம் ஆண்டில் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். இவர் தனது கண்டுபிடிப்பிற்காக 600க்கும் மேற்பட்ட முறை நீதிமன்றத்திற்கு சென்று, வழக்குகளைச் சந்தித்து, வெற்றி பெற்ற பிறகே தொலைபேசிக்கான உரிமையைப் பெற்றார். இவரே பெல் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார்.
2.டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட நாள் 03 மார்ச் 1923.
3.சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 03 மார்ச் 1938.
4.நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்ட நாள் 03 மார்ச் 1969.
5.இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமான நாள் 03 மார்ச் 1971.
6.பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்ட நாள் 03 மார்ச் 1992.

 

– தென்னகம்.காம் செய்தி குழு