இந்தியா

1.எல்லை பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்திருந்தார்.ஆனால், அவரது கோரிக்கையை எல்லை பாதுகாப்பு படை நிராகரித்துவிட்டது.தேஜ் பகதூர் யாதவ் சில நாட்களுக்கு முன்பு  தங்களுக்கு அரசு வழங்கிய உணவு பொருட்களை உயர் அதிகாரிகள் வெளியில் விற்று விட்டு தரம் குறைந்த அரைகுறை உணவு வழங்கி வருவதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2.வருமானவரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வரும் டிசம்பருக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின் வருமான வரிவிலக்கு சலுகை ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4.தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி  ஒப்புதலுக்கு பின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
5.இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 201.50 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 1400 கோடி ரூபாய்) அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் உலக வங்கியுடன் கையெழுத்தாகியுள்ளது.
6.முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் (78) உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக கடந்த ஜனவரி 31-ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திடீரென மயங்கி விழுந்தார்.டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அதிகாலையில் மரணம் அடைந்தார்.இதையடுத்து அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.


உலகம்

1.பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வருவோருக்கு விசாவை நிறுத்தி வைத்து குவைத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்றைய தினம்

1.சோவியத் விண்கலம் லூனா 9 சந்திரனில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்ற நாள்  03 பிப்ரவரி 1966.
2.ஐக்கிய அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்த நாள்  03 பிப்ரவரி 1783.
3.வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட நாள்  03 பிப்ரவரி 1930.
4.சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் புரூஸ் மக்காண்ட்லெஸ், ராபர்ட் ஸ்டுவேர்ட் ஆகியோர் முதன் முதலாக விண்வெளியில் சுயாதீனமான நிலையில் நடந்து சாதனை படைத்த நாள்  03 பிப்ரவரி 1984.
5.இன்று தமிழகத்தின் 7வது முதலமைச்சர், எழுத்தாளர்,தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணாவின் 46-வது நினைவு நாள்.இவர் இறந்த தேதி  03 பிப்ரவரி 1969.

 

– தென்னகம்.காம் செய்தி குழு