current-affairs

தமிழகம்

1.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூரில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் “மயிலந்தீபாவளி’ பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த வருடமும் ஞாயிற்றுக்கிழமை  மயிலந்தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
2.திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சிறந்த திரைக் கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.47வது சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா

1.விவசாயிகளுக்கு உகந்த மாநிலம் குறித்து நிதி ஆயோக் தயாரித்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.குஜராத் மாநிலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழகம் இந்த பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2.மூன்று நாள் அரசு முறைப் பயணமாக  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நேபாளம் சென்றடைந்தார்.18 ஆண்டுகளுக்குப் பிறகு  இந்தியக் குடியரசுத் தலைவர் ஒருவர் நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும்.
3.சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்து கேரள மாநிலம் உருவானதன் 60ம் ஆண்டு(நவம்பர் 01ல்)  ‘வஜ்ர கேரளம்’ என்கிற பெயரில் கொண்டாடப்பட்டது.

உலகம்

1.மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய ரக வகை கீபோர்டை அறிமுகம் செய்துள்ளது.வயர்லஸ் வசதியுடன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய இந்த புதிய ரக கீபோர்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் விலை ரூ. 8,700 ஆகும்.மேலும் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 வகை ஒ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ் வி10.10.5 / 10.11.1 / 10.11.4 ஆகிய ஒ.எஸ்களில் இந்த கீபோர்டை உபயோகிக்க முடியும்.
2.ஹிந்தி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட கார்ட்டூன்களை ஒளிபரப்புவதற்காக நிகலோடியன் சேனலின் அனுமதியை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

விளையாட்டு

1.பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.