Current-Affair-Logo

தமிழகம்

1.சென்னை காவல் துறையின் போக்குவரத்து பிரிவு விரைவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க “ஸ்வைப்’ கருவியை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2.கூடங்குளம் முதல் அணு உலையில் வணிகரீதியில் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட  மின் உற்பத்தி மூலம் ரூ.1000 கோடிக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக அதன் வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

1.நாட்டின் மிகப்பெரிய சுரங்கக் குழாய் நீர் விநியோகத் திட்டம் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள குந்தாவளியில் இருந்து மும்பையின் பாண்டூப் நீர் சுத்திகரிப்பு நிலையம் வரை 15 கி.மீ. தொலைவுக்கு  அமைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இதனை தொடங்கி வைத்தார்.

உலகம்

1.அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் நியமிக்கப்படுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
2.ஐ.நா. சபையின் புதிய தடையை அடுத்து தென்கொரியா,ஜப்பான் ஆகிய நாடுகளும் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடையை விதித்துள்ளன.
3.ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் “மானுட கலாசாரத்தின் பாரம்பரியச் சொத்து’ என்ற அங்கீகாரத்துடன் யோகக் கலையை சேர்த்துக் கொள்ளப்பட்டது.
4.ஐ.நா. பொதுசெயலாளர் பான் கி மூன் ஹைத்தி நாட்டில் பரவிய காலரா நோயை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்காக தனது பத்தாண்டு பதவிக்காலத்தில் முதன்முறையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.இந்த மாதத்துடன்  பான் கி மூன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
5.தென் கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹை ஒரு வாரத்துக்குள் பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி அறிவிக்காவிட்டால் அவரைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றும் ஆளும் சேனூரி கட்சி அறிவித்துள்ளது.அதிபர் பார்க் கியூன்-ஹை அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

விளையாட்டு

1.இந்திய டென்னிஸ் சங்கத்தின் இடைக்கால தலைவராக பிரவீன் மகாஜன்(62), என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் 18 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கி போட்டி வருகிற 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
3.கனடாவின் முன்னணி டென்னிஸ் வீரர் மிலோஸ் ராவ்னிக் பயிற்சியாளர் மோயாவை விட்டு ராவ்னிக் விலகியுள்ளார்.
4.சர்வதேச பேட்மிண்டன் சம்மேளம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் பி.வி.சிந்து 7-வது இடத்தை பிடித்து உள்ளார்.சாய்னா நேவால் 10-வது இடத்திலும்,இந்திய வீரர் சமர் வர்மா 30-வது இடத்திலும், கடாம்பி ஸ்ரீகாந்த் 13-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons).
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் (சர்வதேச ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
2.போபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள் 03 டிசம்பர் 1984.
3.இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21-வது மாநிலமான நாள் 03 டிசம்பர் 1818.
4.வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் 03 டிசம்பர் 1904.
5.20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்ட நாள் 03 டிசம்பர் 1917.
6.தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்ட நாள் 03 டிசம்பர் 1967.
7. “எட்வேர்ட் பொனவென்ச்சர்” என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்த நாள் 03 டிசம்பர் 1592.