தமிழகம்

1.கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் நிறுவப்பட இருக்கின்றன.ரஷ்யாவின் அணு உலை நிறுவனமான ரோஸாட்டம் நிறுவனத்தின் கிளை இந்த அணு உலைகளை உருவாக்குகிறது.ரஷ்ய அரசு 4.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு இத்திட்டத்துக்காக கடனுதவி அளிக்கிறது.கூடங்குளத்தில் அனைத்து 6 அணு உலைகளும் மின் உற்பத்தியைத் தொடங்கி விட்டால் மொத்தமாக 6,000 மெகாவாட் மின்னுற்பத்தி கிடைக்கும்.
2.திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை பணி வைரவிழா மற்றும் 94-ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் இன்று (ஜூன் 3) நடைபெற உள்ளது.
3.சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்குவதற்கு ஏதுவாக, மாதிரி ஓட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்தியா

1.உயர் கல்வித் தரத்தை மேம்படுத்த, தரம் குறைந்த கல்லுாரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என, மத்திய பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
2.பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
3.ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


உலகம்

1.அமெரிக்காவில் நடைபெற்ற ஆங்கில வார்த்தை உச்சரிப்புப் போட்டியில் (ஸ்பெல்லிங் பீ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனன்யா வினய் (12) வெற்றி பெற்றார்.
2.பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது.பாரீஸ் ஒப்பந்தம்’ என்று பொதுவாக அறியப்படும்  சர்வதேச ஒப்பந்தத்தின்படி, பருவ நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் தொழிலக மாசைக் கட்டுப்படுத்துதல், புவி வெப்ப மயமாதலை ஏற்படுத்தும் பழைய தொழில்நுட்பங்களைக் கைவிடுதல், பூமியின் வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முன்னர் இருந்ததைவிட 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் விதமான புதிய தொழில்நுட்பங்களைக் கையாளுதல் உள்ளிட்டவற்றை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.


வர்த்தகம்

1.பொதுத் துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கி ரூ. 3,500 கோடி கூடுதல் மூலதனம் திரட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தது.
2.ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த மே மாதம் 6,33,884 வாகனங்களை விற்பனை செய்ததாக அறிவித்துள்ளது.


விளையாட்டு

1.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.


இன்றைய தினம்

1. 1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.

 

– தென்னகம்.காம் செய்தி குழு