இந்தியா

1.ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.அக்னி-IV ஏவுகணை அணு ஆயுதத்தை தாங்கிக் கொண்டு 4000 கி.மீ வரை பறந்துசென்று எதிரி இலக்குகளை தாக்கி அளிக்கும் வல்லமையுடையது.20 மேட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது.இதனை இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது.
2.இந்தியாவின் முதல் Beer Mile India போட்டி , பெங்களூருவில் ஜனவரி 15ல் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் குறிப்பிட்ட அளவு பீர் அருந்தியபின் கால் மைல் தூரம் ஓட வேண்டும். பின் மீண்டும் பீர் அருந்தியபின் கால் மைல் தூரம் ஓட வேண்டும். இதே போன்று 4 முறை பீர் அருந்தி ஒரு மைல் தூரம் ஓட வேண்டும்.
3.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கும் பொழுது செலுத்த வேண்டிய கட்டண தொகையை ரூ 15,000/ லிருந்து ரூ 100/ ஆக குறைத்து மத்திய அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.
4.நாடுமுழுவதும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லா 708 வட்டாரங்களின் ( பஞ்சாயத்து யூனியன் / ஒன்றியம்) சுகாதார நிலையை மேம்பாடு செய்ய , மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரதுறை , ஊரக வளர்ச்சி துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை உருவாக்க Swachh Swasth Sarvatra என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
5.ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பங்குதாரரான தைவானின் Wistron நிறுவனம், பெங்களூருவில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது.
6.மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி,  ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் , இணைய வழியில் விண்ணப்பம் செய்வதற்கு எளிதாக  Haj Committee of India எனும் அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
7.தில்லி தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் அமைந்துள்ள அணு கடிகாரத்தில் பூமியின் சுழற்சி வேகம் குறைந்திருப்பதை அடுத்து ஜனவரி 1ம் தேதி ஒரு விநாடி கூடுதலாக சேர்க்கப்பட்டது.அதாவது சனிக்கிழமை நள்ளிரவு டிசம்பர் 31ம் தேதி 11.59 மணி 59 விநாடிகள் ஆன போது, புத்தாண்டு பிறந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அதோடு கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு புத்தாண்டு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உலகம்

1.உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என்று ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராகப் பொறுப்பேற்ற அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். அன்டோனியோ குட்டெரெஸ் ஜனவரி 1-ஆம் தேதி முறைப்படி பொருப்பேற்றுக் கொண்டார்.மேலும் அன்டோனியோ குட்டெரெஸ் போர்ச்சுகலின் பிரதமராகப் பதவி வகித்தவர் ஆவார்.
2.கிர்கிஸ்தான் ராணுவத்தின், கவுரவ மேஜர் ஜெனரலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷேக் ரபிக் முகமது [ கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ] நியமிக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டு ராணுவத்தில் உயர் பதவியில், இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.


விளையாட்டு

1.பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் தாக்குர் மற்றும் செயலர் அஜய் ஷிர்க்கே ஆகிய இருவரையும் லோதா குழு பரிந்துரைகளை அமல் செய்யும் விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என்று கூறி பதவி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பிசிசிஐ-யின் புது நிர்வாகிகளை தேர்வு செய்ய மூத்த வழக்கறிஞர்கள் பாலி நாரிமன், கோபால் சுப்பிமணியன் ஆகியோரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2.மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் கடந்த வாரம் 60-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.இதில் ஜூனியர் பிரிவு 50 மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் மதுரை பழங்காநத்தம் டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி எம். ஆதிரை (17) தங்கப் பதக்கம் வென்றார்.


இன்றைய தினம்

1.அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட நாள் 03 ஜனவரி 1947.
2.முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்திய நாள் 03 ஜனவரி 1957.
3.ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்ட நாள் 03 ஜனவரி 1977.
4.இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 03 ஜனவரி 1740.

– தென்னகம்.காம் செய்தி குழு