Daily-Current-Affairs

இந்தியா

1.மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.இதன்மூலம் நாட்டின் 7-வது தேசியக் கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் உயர்ந்துள்ளது.தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1968 விதியின்படி தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை பெற குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மேற்கு வங்கம், மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், திரிணமூல் காங்கிரஸ் மாநிலக் கட்சியாக அங்கீகாரம்  பெற்றுள்ளதை அடுத்து தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம்  வழங்கியுள்ளது.இதன் மூலம் திரிணாமுல் கட்சியின் சின்னத்தை நாடு முழுவதும் வேறெந்த கட்சிகளோ, சுயேச்சைகளோ பயன்படுத்த முடியாது.மேலும் இந்த அங்கீகாரம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடலாம்.
2.ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் சமையல் எரிவாயு பற்றிய முதல் சர்வதேச மாநாடு செப்டம்பர் 01 மற்றும் 02 தேதிகளில் நடைபெற்றது.இதில் பிரேசில், கானா, நைஜீரியா, நேபாள், ஸ்ரீலங்கா உட்பட 12 நாடுகள் கலந்து கொண்டன.
3.மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் ” DiGi SENSE 1.0 ” என்னும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராக்டர், கட்டுமான இயந்திரங்கள் , லாரி மற்றும் அனைத்து விதமான வாகனங்களிலும் வாகனத்தின் இருப்பிடத்தை அதன் உரிமையாளர்கள் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

உலகம்

1.இன்று சர்வதேச கழுகுகள் விழிப்புணர்வு தினம் (International Vulture Awareness Day).

உலகளவில் 23 பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இந்தியாவில் 9 வகை பிணம் தின்னி கழுகுகள் உள்ளன. இக்கழுகு இனங்கள் உலகளவில் விரைவாக அழிந்து வருகின்றன. டைகுளோபினாக் மருந்தை சாப்பிட்ட கால்நடைகள இறந்த பின்பும் அதன் உடலில் இந்த மருந்து தங்கிவிடும். இந்தக் கால் நடைகளை சாப்பிடும் கழுகுகள் இறந்துவிடுகின்றன. இவ்வினத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை  இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
2.பிரேசில்  அதிபர் பதவியிலிருந்து தில்மா ரூசெப் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டின் தற்காலிக புதிய பிரதமராக மிஷெல் டெமர் (75) பதவியேற்றுள்ளார்.நீக்கம் செய்யப்பட்ட தில்மா ரூசெப் பிரேசிலின் முதல் பெண் அதிபர் ஆவார்.
3.கென்யாவின் நைரோபியில் ஆகஸ்ட் 27 & 28 ல் 6th edition of Tokyo International Conference on African Development (TICAD) 2016 நடைபெற்றது.