தமிழகம்

1.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘ Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த பிரிவில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
2.இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு தருமபுரியில் துணை ஆய்வாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.காஷ்மீர் மாநிலத்தில் ஜம்முவையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.28 கி.மீ. தூரத்துக்கு நாட்டிலேயே மிக நீளமான 9.28 கி.மீ  சுரங்க சாலையை பிரதமர் மோடி நேற்று ஸ்ரீநகரில் திறந்து வைத்தார்.
2.ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட நிதி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
3.இணைய சேவை வழங்கும் நிறுவனமான ACT Fibernet ஒரு Gbps வேகத்திலான இணைய சேவையை ஹைதரபாத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த சேவையை அறிமுகம் செய்யும் முதலாவது நிறுவனம் ACT Fibernet ஆகும்.


உலகம்

1.ஊதியம் வழங்கப்படாத அமெரிக்க அதிபரின் உதவியாளராக அதிபர் டிரம்பின் மூத்த மகள் இவான்கா டிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே இவான்காவின் கணவரான ஜாரெட்டு குஷ்னெர், அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மூத்த ஆலோசகராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


இன்றைய தினம்

1.சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் ஆன நாள் 03 ஏப்ரல் 1966.
2.உலகின் முதலாவது பெயரத்தகு கணினி “ஒஸ்போர்ன் 1” சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 03 ஏப்ரல் 1981.

 

– தென்னகம்.காம் செய்தி குழு