இந்தியா

1.சண்டிகரில் அரசு பள்ளியில் பயின்ற ஹர்ஷத் சர்மா என்ற 16 வயது மாணவனுக்கு கூகுள் நிறுவனம் மாதத்திற்கு 12 லட்சம் சம்பளத்துடன் வேலை அளித்துள்ளது.
2.நாட்டிலேயே முதன் முதலாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து விதிமீறல் செய்வோர்களுக்கு அபராதப் புள்ளிகள் அளிக்கப்படும் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.இதன் படி மோட்டார் வாகனச் சட்டப்பிரிவின் கீழ் போக்குவரத்து பலதரப்பட்ட விதிமீறல்களுக்கு ஒன்று முதல் 5 அபராதப் புள்ளிகள் வரை வழங்கப்படும்.24 மாதங்களில் ஓட்டுநர் ஒருவரின் அபராதப் புள்ளிகள் 12-ஐ எட்டிவிட்டால் அவரது ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும்.ஓராண்டு ரத்திற்குப் பிறகு மீண்டும் 12 அபராதப் புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமம் 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும்.இதே போல் ஒவ்வொரு முறையும் 12 அபராதப் புள்ளிகளைச் சேகரித்துக் கொண்டே வந்தால் ஓட்டுநர் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும்.
3.பட்டாசு தயாரிப்பில் ஆர்சனிக், ஆன்டிமோனி, பாதரசம், காரீயம் , லித்தியம் உள்ளிட்ட 5 ரசாயனங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.


உலகம்

1.சுவிட்சர்லாந்து நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள மெட்டர்கான் மலைகளை இணைக்கும் உலகின் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் சுவட்சர்லாந்தின் கிராச்சென் மற்றும் செர்மட் நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.


வர்த்தகம்

1.கனரா வங்கி முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வங்கி கிளையை பெங்களூவில் துவக்கியுள்ளது. இதற்கு CANDI என பெயரிட்டுள்ளது.


இன்றைய தினம்

1.1492 – கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.
2.1934 – ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.
3.1949 – தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
4.1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

 

 

– தென்னகம்.காம் செய்தி குழு