Current-Affairs-Updates

இந்தியா

1.மராட்டிய மாநிலத்தில் ஜெய்தீப் ஜாதவ்-ரேஷ்மா பாட்டீல் தம்பதியினர் சுமார் 600 அடி உயரத்தின் மீது கயிற்றில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.கடந்த ஞாயிறுக்கிழமை கோலாப்பூர் அருகே 70கி.மீ தொலைவில் உள்ள ஜாக்ஹாணி மலைப் பகுதியில் சுமார் 600 அடி உயரத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
2.நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு (“நீட்’) மூலம் நிரப்ப வகை செய்யும் இரு சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின.
3.மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் தலைவராக மூத்த வருவாய் சேவைத்துறை (ஐஆர்எஸ்) அதிகாரி ராணி சிங் நாயர் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.அதன் தலைவராக அவர், வரும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை பதவி வகிப்பார்.
4.திருநங்கையரை மூன்றாம் பாலின மாக அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களை பாதுகாக்கும் வகையிலும், புதிய மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
5.மேற்கு வங்க பெயரை ஆங்கிலத்தில், பெங்கால் எனவும், பெங்காலி மொழியில் பங்கா எனவும் பெயர் மாற்ற மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம்

1.தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்ட நாள் 03 ஆகஸ்டு 1949.
2. நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் 03 ஆகஸ்டு 1960.இன்று நைஜர் விடுதலை அடைந்த நாள்.