current-affairs

தமிழகம்

1.அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19-ல் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
2.எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சார்பில் தமிழ் இலக்கியம், கலை, தொழில் துறையில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஏ.அறிவுநம்பிக்கு (டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருதும்), பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் (டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருதும்), தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு(டாக்டர் ஏ.சி.முத்தையா விருதும்)  ஆகியோர் 2016-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற உள்ளனர்.மறைந்த டாக்டர் எம்.ஏ.சிதம்பரத்தின் 98-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் 12-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்படுகிறது.

இந்தியா

1.‘பாகுபலி’ கதாபாத்திரத்தின் மெழுகுச்சிலை வரும் 2017ம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற லண்டன் மதாம் துசோட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவப்பட உள்ளது.
2.கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம் எனவும்,இருச் சக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மட் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி மும்பை வாழ் திருநங்கைகள் குழுவாக திரண்டு மும்பையின் முக்கிய சாலைகளில் இறங்கி சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை விளக்கி வருகின்றனர்.

உலகம்

1.இன்று உலக குடியிருப்பு தினம் (World Habit Day).
மக்கள் நகரங்களில் குடியேறுவதால் வாழ்விட பிரச்சினை ஏற்படுகிறது. இதன்மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக ஐ.நா. பொதுச்சபை 1985ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இதன்படி அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக குடியிருப்பு தினமாக அறிவித்தது. நகரத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், நகர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இதன் நோக்கமாகும்.

வர்த்தகம்

1.மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தலைவர் அருந்ததி பட்டாச்சார்யாவுக்கு மேலும் ஓராண்டு காலத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது.
2.விமானப் பயணத்தின் போது சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்போனை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

8.இன்று கிருஷ்ணகிரி மாவட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது.இம் மாவட்டம் கண்ணன்மலை என்றும் அறியப்பட்டிருக்கின்றது.கிருஷ்ணகிரி நகரம் பல ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த இடம் பல ஆண்டு கால பழமை வாய்ந்த ஓவியங்களையும் கற்சிலைகளையும் கொண்டுள்ளது.இதன் பகுதிகளான கிருஷ்ணகிரி முற்காலத்தில் “எயில் நாடு” எனவும், ஓசூர் “முரசு நாடு” எனவும், ஊத்தங்கரை “கோவூர் நாடு” எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கிருஷ்ணகிரியின் மொத்த பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டமானது கிழக்கே வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கர்நாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மாநிலத்தையும், தெற்கே தர்மபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் கொண்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலையின் கீழ் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, மற்றும் சென்னை – பெங்களூர் 46, பாண்டிச்சேரி – பெங்களூர் 66 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
“ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை”யின் படி சேலம் மற்றும் பாரா மஹால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருஷ்ணகிரி மாறியது.
மூதறிஞர் இராஜாஜி, கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார்.
கிருஷ்ணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த(சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது.
2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருஷ்ணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.