இந்தியா

1.இந்தியாவுக்குள் 5 ஆண்டுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையிலான சுற்றுலா விசா, வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
2.ராமானுஜரின் 1000-வது அவதார தினவிழாவை முன்னிட்டு ரூ.25 மதிப்பிலான தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.


உலகம்

1.சீனா பாகிஸ்தான் இணைந்து உருவாக்கியுள்ள JF – 17B போர் விமானம், வெற்றிகரமான பரிசோதனை ஓட்டத்தை முடித்துள்ளது.


விளையாட்டு

1.அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரில் நடைபெற்ற டலஹாசி ATP சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி , அர்ஜென்டினாவின் லியானர்டோ, மேக்சிமோ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு  இறுதிப்போட்டியில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன், சுலோவேனியாவின் பிளாஸ் ரோலாவிடம் தோல்வியடைந்தார்.
2.சீன தைபேயில் நடைபெற்று வரும் ஆசிய தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.ஆண்களுக்கான 400 மீ, ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அனாஸ் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
3.சிலியில் நடைபெற்ற சேலஞ்ச் சீரிஸ் டேபிள் டென்னிஸ் தொடர் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ், மற்றொரு இந்திய வீரரான அந்தோனி அமல்ராஜை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ், அந்தோனி அமல்ராஜ் ஜோடி, ஜெர்மனியின் பிலிப் புளோரிட்ஸ், ருமேனியாவின் ஹுனார் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
4.பார்சிலோனா ஓபன் டென்னிஸ் , ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


இன்றைய தினம்

1.உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள் 02 மே 2017.
2.இன்று இந்தோனேசியாவில் தேசிய கல்வி நாள் .
3.உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்த நாள் 02 மே 1952.

 

– தென்னகம்.காம் செய்தி குழு