இந்தியா

1.வரும் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும் என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் சலாம் உடல்நலக் குறைவால் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி காலமானார்.
3.மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது.இது உடனடியாக அமலுக்கு வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.முன்னதாக மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.746.50 ஆக இருந்து வந்தது.இது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
4.ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் எதிரி நாடுகளின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.கடந்த மாதம் பிப்ரவரி 11-ந்தேதி இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.தற்போது ஒரு மாத இடைவெளியில் 2-வது தடவையாக நேற்று மீண்டும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.


உலகம்

1.லண்டனில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து இடையிலான கலாசார விழாவில் இந்திய சார்பில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், ராணி எலிசபெத்தை சந்தித்தார்.20 வருடங்களுக்கு பிறகு ராணி எலிசபெத்துடன், நடிகர் கமல்ஹாசன் மீண்டும் சந்தித்துள்ளார்.இந்த கலாசார விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது.
2.அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையிலிருந்து ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார்.


விளையாட்டு

1.இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான பெயர் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.சீனியர் பிரிவில் பாலி உம்ரிகர் விருதினை கேப்டன் விராட் கோலி பெறுகிறார்.மூன்றாவது முறையாக இந்த விருதினை விராட் கோலி பெறுகிறார்.மேலும் மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் விராட் கோலி ஆவார்.திலிப் சர்தேசாய் விருது சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெறுகிறார்.இவ்விருது வழங்கும் விழாவானது வரும் 8-ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
2.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.


இன்றைய தினம்

1.மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் ஆரம்பிப்பதற்காக அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கிய நாள் 02 மார்ச் 1930.
2.ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபரான நாள் 02 மார்ச் 1946.
3.தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் 02 மார்ச் 1958.
4.யாஹூ தொடங்கப்பட்ட நாள் 02 மார்ச் 1995.

 

– தென்னகம்.காம் செய்தி குழு