இந்தியா

1.பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டும் இணைத்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது அருண் ஜெட்லி தாக்கல் செய்யும் 4 வது பட்ஜெட் ஆகும்.


உலகம்

1.அதிபர் டொனால்ட் டிரம்ப்  அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பழமைவாதக் கொள்கையைக் கொண்ட நீல் கோர்ஸச்சை (49), நியமித்துள்ளார்.
2.அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக எண்ணெய் நிறுவன தலைவரான ரெக்ஸ் டில்லர்சன் (64),  பொறுப்பேற்க உள்ளார். இவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்துள்ளது.


வர்த்தகம்

1.ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஸ்வைப்பிங் மெஷின்கள் மீதான அனைத்து வரிகளும் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


விளையாட்டு

1.மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸல் ஊக்க மருந்து தொடர்புடைய விவகாரத்தில் அவருக்கு ஒருவருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 31, 2017 முதல் ஜனவரி 30, 2018 வரையுள்ள தடைக்காலத்தில் ரஸலால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளமுடியாது.
2.இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்றாவது  20 ஓவர் போட்டியில் யுஸ்வேந்திர சஹா 25 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய வீரர்களில் அஸ்வின் 8 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்ததே சிறந்த நிலையாக இருந்து வந்தது.தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் இது  3-வது சிறந்த நிலையாகும்.இலங்கை வீரர் அஜந்தா மெண்டீஸ் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.யுஸ்வேந்திரா சாஹல்க்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.


இன்றைய தினம்

1.இன்று உலக சதுப்பு நில நாள் (World Wetland Day).
பிப்ரவரி மாதம் 2 அன்று 1971ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக ஒரு மாநாடு நடைபெற்றது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே பிப்ரவரி 2 அன்று இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2.ஜெர்மனி நாடாளுமன்றத்தை ஹிட்லர் கலைத்த நாள் 02 பிப்ரவரி 1933.
3.கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கிய நாள் 02 பிப்ரவரி 1848.
4.முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்ட நாள் 02 பிப்ரவரி 1880.
5.செய்மதித் தொலைக்காட்சிச் சேவை ஸ்கை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் 02 பிப்ரவரி 1989.

 

– தென்னகம்.காம் செய்தி குழு