current_affairs

இந்தியா

1.கடந்த அக்டோபர் 31ம் தேதி நான்கு நாள் பயணமாக இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா மியான்மருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு இருதரப்பு ராணுவ உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

உலகம்

1.லெபனான் அதிபராக முன்னாள் ராணுவ தளபதி மைக்கேல் ஆவுன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2.அக்டோபர் 24 முதல் நவம்பர் 06 வரை இந்தியா, இலங்கை ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ராணூவ பயிற்சி 6வது மித்ரா சக்தி – 2016 இலங்கையில் நடைபெறுகிறது.
3.அக்டோபர் 31 முதல் நவம்பர் 13 வரை இந்தியா, நேபாள் இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சி சூர்யா கிரண் – 10 நேபாளில் நடைபெறுகிறது.

வர்த்தகம்

1.உலக வங்கியுடன் இணைந்து மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (டிஐபிபி) நடத்திய ஆய்வுகள் முடிவில் எளிதில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் ஆந்திரப் பிரதேசமும், தெலங்கானா மாநிலமும் முதலிடத்தைப் பிடித்துள்ளன.குஜராத் மாநிலம் மூன்றாவது இடத்திலும்,சத்தீஸ்கர் மாநிலம் நான்காவது இடத்திலும்,மத்தியப் பிரதேசம் ஐந்தாவது இடத்திலும்,ஹரியாணா ஆறாவது இடத்திலும்,ஜார்க்கண்ட் ஏழாவது இடத்திலும்,ராஜஸ்தான் எட்டாவது இடத்திலும் உள்ளன.இந்த பட்டியலில் தமிழ்நாடு 18வது இடத்தைப் பிடித்துள்ளது.

விளையாட்டு

1.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தனது சுயசரிதையை ‘The Wrong Un’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
2.அதிக டெஸ்ட் தொடர்களை(10 டெஸ்ட் தொடர்களை) வென்ற ஆசிய கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நிகழ்த்தியுள்ளார்.சவுரவ் கங்குலி, தோனி ஆகியோர் 9 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளனர்.