current-affairs

தமிழகம்

1.புதுச்சேரி முன்னாள் துணை சபாநாயகரும்,நாடக கலைஞருமான ஏ.வி.ஸ்ரீதரன்(72) இன்று காலமானார்.
2.நடா புயல் நாகை அருகே இன்று கரையை கடந்தது.
3.திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக இ-உண்டியல் முறையை கோயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
4.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் (82), சென்னையில் நேற்று காலமானார்.

இந்தியா

1.மத்திய அமைச்சரவை அஸ்ஸாம், பிகார், ஹிமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், உத்தரகண்ட் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 15 ஜாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் இந்த பட்டியலில் உள்ள 9 ஜாதிகளில் உபஜாதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 4 ஜாதிகளின் பெயர்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2.தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பாக, 7-ஆவது இந்திய உடல் உறுப்பு தானம் தினம் தில்லியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி கொண்டாடப்பட்டது. உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை வழங்கலில் முதன்மை மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.இந்த விருதை தமிழகம் 2வது முறையாக பெற்றுள்ளது.
3.ஜன் தன் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
4.அரசின் மானியங்கள், திட்டப் பலன்கள் ஆகியவற்றைப் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று  மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
5.பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான விளம்பரங்களுக்கு மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1,100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
6.நாடாளுமன்றத்தில் உள்ள உணவு விடுதிகளில் ரொக்கப் பண பரிவர்த்தனைக்குப் பதிலாக மின்னணு பணப் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டுள்ளது.
7.பிரபல நடிகர் சல்மான்கான் பிரிஹன் மும்பை ( Brihanmumbai ) மாநகராட்சி சார்பிலான திறந்தவெளியில் மலம் கழிப்பு மற்றும் சாலைகளில் எச்சில் துப்புவதற்கு எதிரான பிரச்சார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8.சிறப்பான சுயசரிதை நூல்கள் பிரிவில் Crossword Book of the Year Award-யை  சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் Playing It My Way புத்தகம் பெற்றுள்ளது.
9.ரிசர்வ் வங்கியின் சென்னை தலைமை பொது மேலாளராக அருந்ததி மெக் நேற்று பொறுப்பு  ஏற்றுக்கொண்டார்.

உலகம்

1.கடந்த மாதம் அமெரிக்க அரசு தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் பொருட்டு சிறப்பு தபால்தலை வெளியிட்டு சிறப்பித்திருந்தது.இதற்கான முழுமுயற்சி மேற்கொண்டு தபால்தலை வெளியாக சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். அமெரிக்க வாழ் இந்தியர் Ranju Batra ஆவார்.
2.அமெரிக்காவிடம் இருந்து M 777 இலகு ரக Howitzer துப்பாக்கிகள் 145ஐ இந்தியா வாங்கவுள்ளது.இதற்காக 750 மில்லியன் டாலர் ( சுமார் 5000 கோடி ) மதிப்பீட்டில் துப்பாக்கிகளை வாங்க பாதுகாப்பு குழு ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு

1.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷ்யா கிராண்ட் மாஸ்டர் செர்ஜி கர்ஜாகின்னை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.உலக சாம்பியன் பட்டத்தை இவர் மூன்றாவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery).
அடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின் மூலம் டிசம்பர் – 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.
2.இன்று உலக கணினி கல்வி தினம் (World Computer Literacy Day).
கணினிப் பொறியானது மிகக் குறைந்த நேரத்தில், வேலைகளை மிகச் சரியாகச் செய்து முடிக்கிறது. கணினி தற்போது வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஒரே இடத்தில் இருந்துகொண்டு மின்னஞ்சல் மூலம் உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடிகிறது. ஆகவே அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகிறது.
3.பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான நாள் 02 டிசம்பர் 1988.
4.பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரான நாள் 02 டிசம்பர் 1976.