தமிழகம்

1.தமிழக காவல்துறையின் உளவுத்துறை DGP மற்றும் கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக பதவி வகித்து வந்த டி.கே.ராஜேந்திரன் IPS , கடந்த ஜூன் 30 -ம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் , 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு DGP ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இந்தியா

1.ஆகஸ்ட் 2017-ல் மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவின் நல்லெண்ண தூதராக வித்யா பாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.


உலகம்

1.பெரு நாட்டிற்கான அமெரிக்க தூதராக, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கிருஷ்ணா R. அர்ஸ்-ஐ அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார்.
2.இரண்டாவது சர்வதேச திறன் வளர்ச்சி மாநாடு, பாரிசில் கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23 -ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது.


இன்றைய தினம்

1.1940 – சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
2.1962 – முதலாவது வால் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
3.2004 – ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு