தமிழகம்

1.பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்கவும்,இறைச்சிக்காகவும், கொல்வதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
2.தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய செயலாளர் ஜமாலுதீன் ஓய்வு பெற்றதையடுத்து புதிய செயலாளராக    பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.


இந்தியா

1.வரும் ஜூலை 1-ந்தேதி முதல் கோவா மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளை விற்றாலும், வாங்கினாலும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.வெள்ளை மாளிகையில் தகவல்தொடர்பு இயக்குநராக பணிபுரிந்து வந்த மைக் டப்கி தனிப்பட்ட அலுவல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2.ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ‘ரோபோ’ பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ‘ரோபோ’வுக்கு ‘பிளஸ்யூ -2’ என பெயரிடப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.பார்சிலோனா கால்பந்து கிளப் அணயின் புதிய பயிற்சியாளராக அத்லெடிக் பில்பாயோ அணியின் பயிற்சியாளரான எர்னெஸ்டோ வால்வேர்டெ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.02 ஜூன் 1966 ஆம் ஆண்டு நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
2.பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 02 ஜூன் 1999.

 

– தென்னகம்.காம் செய்தி குழு