இந்தியா

1.இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக விபின் ராவத் கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த தல்பீர் சிங் சுஹாக் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைத் தளபதி பதவியேற்றுக் கொண்டார்.
2.பிரபல ஹிந்தி நடிகர் ரிஷிகபூர் , தனது சுயசரிதையை Khullam Khulla என்ற பெயரில் புத்தகமாக மீனா ஐயருடன் இணைந்து எழுதியுள்ளார்.
3.இந்தியா, பாகிஸ்தானில் செயல்படும் அணு மின் நிலையங்களின் பட்டியலை இருநாடுகளும் நேற்று பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.முதல்தடவையாக 1992 ஜனவரி 1-ம் தேதி பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்போது 26-வது முறையாக டெல்லி, இஸ்லாமாபாதில் உள்ள தூதரகங்கள் வாயிலாக இரு நாடுகளும் ஒரே நேரத்தில் நேற்று தகவல்களைப் பரிமாறிக்கொண்டன.மேலும் இரு நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய, பாகிஸ்தான் சிறைக் கைதிகள் தொடர்பான விவரங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


உலகம்

1.பிரிட்டன் ராணியால் வழங்கப்படும் சிறப்புமிகு ” சர் ” பட்டம் , இந்திய வம்சாவழி பேராசிரியர் சங்கர் பாலசுப்ரமணியம் , ஹர்தீப் சிங் பெகோல் , கமல்தீப் சிங் பூய் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2. 2016ம் ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் / உத்வேகமானவர்கள் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 5 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.Jimmy Carter,Nate Bowling,Nandan Nilekani,Dr. Ana Mari Cauce,Ken Caldeira ஆகியோர் பில் கேட்ஸ்க்கு பிடித்தமானவர்கள் பட்டியலில் உள்ளனர்.


விளையாட்டு

1.இந்தியாவின் சார்பாக ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்த பிரபல வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2.அபுதாபியில் நடைபெற்ற Mubadala World Tennis Championship – 2016 போட்டியில் ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார்.ரபேல் நடால் 6-4 7-6, என்ற செட் கணக்கில் டேவிட் கோபின்னை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
3.உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஆன்டி முரேவுக்கு பிரிட்டனின் ராணி சர் பட்டம் வழங்கி கவிரவித்துள்ளனர்.
4.International Federation of Football History & Statistics (IFFHS) அமைப்பு , அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை World’s Best Playmaker ஆக தேர்வு செய்துள்ளது.
5.டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
6.இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் தொடங்கவுள்ள டி20 தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் தற்காலிக உதவி பயிற்சியாளர் ஜேசன் ஜில்லஸ்பி ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


இன்றைய தினம்

1.கல்கத்தாவை ஐக்கிய ராச்சியம் கைப்பற்றிய நாள் 02 ஜனவரி 1757.
2.பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நாள் 02 ஜனவரி 1954.
3.ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டிய நாள் 02 ஜனவரி 2004.

 

– தென்னகம்.காம் செய்தி குழு