Current-Affairs-Updates

தமிழகம்

1.முதல்வர் ஜெயலலிதா  சட்டப் பேரவையில் 110-ஆவது விதியின்கீழ்  வெளியிட்ட அறிவிப்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் 6 மாத கால மகப்பேறு விடுப்பு  9 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
2.சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி என்.ஆதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை  உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.சென்னை  உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும்.இன்னும் 36 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

உலகம்

1.இன்று  சர்வதேச தேங்காய் தினம் (International Coconut Day).

ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக் கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
2.பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் (பிஐஏ) பைலட்களாக பணியாற்றும் மர்யம் மசூத், எரூம் மசூத் என்ற சகோதரிகள் இருவர் போயிங் 777 ரக விமானத்தில் சேர்ந்து பணியாற்றினர்.இதன் மூலம் ஒரே விமானத்தில் பணியாற்றிய முதல் பைலட் சகோதரிகள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
3.இன்று வியட்நாம் நாட்டில் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.

விளையாட்டு

1.அமெரிக்காவில் வான்கூவரில்  நடைபெற்ற மாஸ்டர் கேமில் இந்தியாவை சேர்ந்த 100 வயது பெண்மணி மன் கவுர் தடகள போட்டி,குண்டு எறிதல், ஈட்டி ஏறிதல் போன்ற போட்டிகளில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.மேலும் 100 மீ ஓட்டத்தில் 1 நிமிடம் 21 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.உலகம் முழுவதும் கடந்த ஏழு ஆண்டுகளில்  நடைபெற்ற மாஸ்டர் கேம்மில் கலந்து கொண்டு இதுவரை 20 பதக்கங்களை வென்றிருக்கிறார்.இந்த விளையாட்டுப்போட்டி  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.49 வயதை கடந்த அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.மேலும் இந்தபோட்டியில் கலந்து கொண்டவர்களில்  பெண் இவர் ஒருவர் மட்டுமே.
2.ஸீ எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த டென் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை வாங்க சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனம் 385 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.