இந்தியா

1.பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க , உத்திரபிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Romeo Squad.இதேபோல் மத்திய பிரதேச காவல்துறை ஏற்படுத்தியுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெயர் Anti Majnoo Squad ஆகும்.
2.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் தால் ஏரி அருகில்  பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


உலகம்

1.சீன மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த ஆண்கள் நீண்ட தாடி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல் பொது இடங்களில் பெண்கள் முகத்தில் திரை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.ஈரான் வீராங்கனைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் பில்லியர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம்

1.இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day).
ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோய். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஆட்டிசம் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2.இன்று பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Children’s Book Day).
இத்தினம் 1967ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆன்சு கிறித்தியன்ஆண்டர்சன் என்னும் குழந்தை எழுத்தாளரின் பிறந்த நாள் (ஏப்ரல் 2, 1805) ஆகும். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்கிற நோக்கத்திற்காக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
3.ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்ட நாள் 02 ஏப்ரல் 1902.
4.டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்த நாள் 02 ஏப்ரல் 1912.
5.இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்ட நாள் 02 ஏப்ரல் 1921.
6.ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நாள் 02 ஏப்ரல் 1984.

 

– தென்னகம்.காம் செய்தி குழு