இந்தியா

1.RDEL எனப்படும் ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம், P – 21 திட்டத்தின் மூலம் உருவாக்கிய இரண்டு ரோந்து கப்பல்கள், கடற்படையிடம் வழங்கப்பட்டுள்ளது.இவற்றிற்கு ஷாசி, ஸ்ருதி என பெயரிடப்பட்டுள்ளன.
2.DRDO அமைப்பு முதன்முறையாக ரிமோட் மூலம் இயங்க கூடிய , ஆளில்லா டாங்கிகளை உருவாக்கியுள்ளது.
இதற்கு முந்த்ரா டாங்க் (Muntra Tank) என பெயரிடப்பட்டுள்ளது.இதில் Muntra – S , Muntra – M , Muntra – N என 3 வகையான டாங்குகள் உள்ளன.
3.நாட்டிலுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைகளை அவசர கால விமான ஓடுதளமாக பயன்படுத்துவதற்கு இந்திய விமானப்படை அனுமதி வழங்கி இருக்கிறது.இதில், சென்னை – புதுச்சேரி இடையிலான ஈசிஆர் சாலைக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே டெல்லி – ஆக்ரா இடையிலான விரைவு சாலை மற்றும் லக்னோ – ஆக்ரா இடையிலான விரைவு சாலையில் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4.நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா , தனது பொறுப்பில் இருந்து ஆகஸ்ட் 31 முதல் விலகுவதாக அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.நைஜீரியாவில் நடைபெற்ற Lagos International Challenge Badminton போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராகுல் யாதவ் , மற்றொரு இந்திய வீரர் கரண் ராஜன் ராஜராஜனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி மற்றும் சுமீத் ரெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இன்றைய தினம்

1.1870 – உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

 

– தென்னகம்.காம் செய்தி குழு