Current-Affairs-Updates

தமிழகம்

1.இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்  காமராசர் இறந்த நாள்.இவர் இறந்த தேதி 02 அக்டோபர் 1975.

இந்தியா

1.சொத்துகளை வைத்துள்ளோர், கணக்கில் காட்டப்படாத வருமானம் வைத்துள்ளோர் தாமாக முன்வந்து வருமான வரித் துறையிடம் தெரிவிக்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
2.தில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பயணிகள் வசதிக்காக விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
3.சென்னையில் தெற்கு ரயில்வேயின் 2016-2017ம் ஆண்டுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது.இதில் 9 புதிய ரயில்கள் இடம் பெற்றுள்ளன.இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடும் 13 -ஆவது மண்டல கால அட்டவணையாகும்.தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி, தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன் ஆகியோர் கால அட்டவணையை வெளியிட்டனர்.
4.நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது என்றும்,குறைந்த அளவு மது அருந்துவது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
5.இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் 2016–17–ம் ஆண்டுக்கான தலைவராக சோமேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.துணைத்தலைவராக அகிலா உரங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உதவித்தலைவராக கே.பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் பொதுச் செயலாளராக வி.சங்கரன் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6.இன்று மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 02 அக்டோபர் 1869.
7.இன்று காந்தி ஜெயந்தி.
காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் “அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு  வருகிறது.

உலகம்

1.இந்தியாவில் அக்டோபர் மாதம் 21 முதல் 23-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில்  பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜமாலி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே  பதற்றமான சூழல் நிலவுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியா உள்ளிட்ட 5 உறுப்பு நாடுகள் அறிவித்ததை அடுத்து, அந்த மாநாட்டை பாகிஸ்தான் அரசு தள்ளி வைத்துள்ளது.மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
3.பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்கள் மற்றும் சினிமாக்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.இந்த தடையை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
4.இன்று அனைத்துலக வன்முறையற்ற நாள் (International Day of Non-Violence).
காந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 15 ஜூன்  2007இல் அறிவித்தது.

விளையாட்டு

1.சீனாவின் உஹான் நகரில் நடைபெற்ற உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி 1-6, 4-6 என்ற செட் கணக்கில் சஃபரோவா – மாடெக் ஜோடியிடம் தோல்வி அடைந்தனர்.
2.சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-ஆவது இடத்தில் இருந்து 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.மகளிர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தியாவின்  பி.வி.சிந்து 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
3.கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கியது.இது இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-ஆவது டெஸ்ட் போட்டியாகும்.இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல,ஈடன் கார்டன் மைதானத்தில் மணியடித்து கபில் தேவ் போட்டியைத் தொடங்கி வைத்தார்.இதற்காக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது.
4.வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற  ஆசிய கோப்பை பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்

7.இன்று காஞ்சிபுரம் மாவட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர்,  சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம்.இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.மாமல்லபுரம்,வேடந்தாங்கல்,முட்டுக்காடு,காஞ்சி சங்கர மடம் ஆகிய சுற்றுலா தளங்களும் உள்ளன.