தமிழகம்

1.திருச்சி மத்திய சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, அவர் எழுதிய “மண்ணும், மழை நீரும்” என்ற நூலுக்காக பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை பரிசு வழங்கப்பட்டுள்ளது.


இந்தியா

1.இந்தியாவில் விமான போக்குவரத்து முழுவதையும் டிஜிட்டல்மயமாக்க டிஜி யாத்ரா என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
2.கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஐமனம் ( Aymanam ) கிராமத்தில் உள்ள 15வது வார்டு , நாட்டிலேயே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் கிராம வார்டு என்ற பெயரை பெற்றுள்ளது.இந்த வார்டில் குடியிருப்போர் அனைவர் பற்றிய விபரங்களும் http://www.digitalaymanam.com என்ற வலைத்தள முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3.நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் உள்ள சூரிய மின்னாற்றல் வளங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக ISRO, அதன் துணை நிறுவனமான Space Applications Centre (SAC) உடன் இணைந்து சோலார் கால்குலேட்டர் செயலியை (Solar Calculator App) உருவாக்கியுள்ளது.


உலகம்

1.எவரெஸ்ட் சிகரத்தை புதிய வழியில், ஆக்ஸிஜன் இல்லாமல் அடைய பயணம் மேற்கொண்ட முயற்சியில் “ஸ்விஸ் மெஷின்” என்று அழைக்கப்படும் யூலி ஸ்டெக், ( Ueli Steck ) உயிரிழந்தார்.
2.1941-ஆம் ஆண்டு முதல் கடந்த 76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நேற்றுடன் ( ஏப்ரல் 30 / 2017 ) நிறுத்தப்பட்டது.


விளையாட்டு

1.சென்னையில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹாங்காங்கின் மேக்ஸ் லீ இந்தியாவின் சவுரவ் கோஷலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா , மற்றொரு இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.


இன்றைய தினம்

1.இன்று உலகத் தொழிலாளர் தினம் (International Labour Day).
உலகத் தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என்பன 8 மணி வேலை நேரம் கேட்டுப் போராடியதால் பிறந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, கியூபா, சிலி போன்ற நாடுகள் 1890ஆம் ஆண்டில் மே – 1 ஐ தொழிலாளர்கள் தினமாகக் கடைப்பிடித்தனர். இதே சமயத்தில் சர்வதேச பொதுவுடமை மற்றும் தொழிற்சங்க மாநாடு 8 மணி நேர வேலையை உலகம் முழுவதும் கொண்டு வர மே – 1 ஐ தொழிலாளர் தினமாக கொண்டாட அறைகூவியது.
2.உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்ட நாள் 01 மே 1840.
3.புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் 01 மே 1930.

 

– தென்னகம்.காம் செய்தி குழு