தமிழகம்

1.செங்கல் அறுக்கும் கருவியை கண்டுபிடித்தற்காக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி இரா.ஆர்த்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் “குருசேத்ரா” எனும் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.


இந்தியா

1.ரயில்வே துறையில் முதல் முறையாக தெற்கு ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் பெரம்பூர் கேரேஜ் மற்றும் வேகன் பணிமனைக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் சுற்றுச்சூழல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.


விளையாட்டு

1.உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்களுக்கான டபுள் டிராப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் வில்லெட் 75 புள்ளிகள் குவித்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.74 புள்ளிகள் சேர்த்த 24 வயதான இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.56 புள்ளிகள் சேர்த்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெட்மான் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜிதுராய்-ஹீனா சித்து இணை 5-3 என்ற புள்ளிகணக்கில் ஜப்பானின் யுகாரி கோனிஷி- தமோயுகி மெட்சுடா ஜோடியை சாய்த்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட ஜப்பான் இணை வெள்ளிப்பதக்கத்தை வென்றது.சுலோவேனியாவின் நாப்ஹாஸ்வான்- கெவின் வென்டா ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.
2.கிரிக்கெட் இணையதளமான இ.எஸ்.பி.என்.கிரிக் இன்போ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின்(2016-17) சிறந்த கேப்டன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு  வழங்கப்பட்டுள்ளது.மேலும் தென்ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் விருதுக்கும்,வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் விருதுக்கும்,வெஸ்ட்இண்டீஸ் வீரர் பிராத்வெய்ட் 20 ஓவர் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் விருதுக்கும், வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிகுர் ரஹ்மான் 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் விருதுக்கும், வங்காளதேச இளம் வீரர் மெஹதி ஹசன் மிராஸ் சிறந்த அறிமுக வீரர் விருதுக்கும் தேர்வாகினர்.அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


இன்றைய தினம்

1.ஸ்பெயினில் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட நாள் 01 மார்ச் 2002.
2.இன்று எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 01 மார்ச் 1910.
3.சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்திய நாள் 01 மார்ச் 1700.
4.ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்ட நாள் 01 மார்ச் 1936.
5.ஆஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் 01 மார்ச் 1975.
6.சார்லி சாப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்ட நாள் 01 மார்ச் 1977.
7.இன்று தி.மு.க. செயல் தலைவர்  மு. க. ஸ்டாலின் பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 01 மார்ச் 1953.

 

– தென்னகம்.காம் செய்தி குழு