தமிழகம்

1.சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய “ஸ்பார்க்” என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.


இந்தியா

1.ராஜஸ்தான் மாநிலத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும் வகையிலான திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
2.மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது.


உலகம்

1.அமெரிக்க நாடாளுமன்றத்தில் “சூரிய நமஸ்கார் யஜ்னா”வுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2.அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் பிரத்தியேக சட்ட ஆலோசனைக் குழு செயல்பட்டு வருகிறது. மூத்த வழக்குரைஞரான டொனால்ட் மெக்கான் அந்தக் குழுவிற்குத் தலைமை வகித்து வருகிறார்.அந்தக் குழுவில் சட்ட அமலாக்கம், சட்ட ஒழுங்குப் பிரிவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தம் தில்லன் நியமிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


விளையாட்டு

1.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை  உச்ச நீதிமன்றம்  நியமித்துள்ளது.மேலும் இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரை உச்ச நீதிமன்றம்  நியமித்துள்ளது.
2.தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக உருவெடுத்துள்ள இந்தியாவின் சரிதா தேவி, தனது முதல் போட்டியில் ஹங்கேரியின் சோபியா பீடோவை வீழ்த்தினார்.
3.பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் புதுடெல்லியில் கடந்த 30 ஜனவரி 2017-ல்  தொடங்கியது.இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் இந்த போட்டியில் கலந்துகொள்கின்றன.இந்த போட்டிகளின் நல்லெண்ண தூதராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்றைய தினம்

1.உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயார்க் நகரில் திறக்கப்பட்ட நாள் 01 பிப்ரவரி 1913.
2.கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்ட நாள் 01 பிப்ரவரி 2003.
3.கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடான நாள் 01 பிப்ரவரி 2005.
4.இன்று இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த நாள்.இவர் இறந்த தேதி 01 பிப்ரவரி 2003.

 

– தென்னகம்.காம் செய்தி குழு