tamil

இந்தியா

1.நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கடந்த ஆண்டில் ரூ.1.96 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி செய்து தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.குஜராத் முதலிடத்தையும்,மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
2.இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம் இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக டெல்லியில் செலக்ட் சிட்டி வாக் மால் மற்றும் பெங்களூர் ஃபோரம் மால் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் நகை விற்பனை செய்யும் புளூஸ்டோன் நிறுவனம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

உலகம்

1.அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி  தீபாவாளி கொண்டாடினார்.

விளையாட்டு

1.டென்னிஸ் தரவரிசையில் மகளிர் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக முதலிடத்தை இந்தியாவின் சானியா மிர்ஸா தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
2.சிங்கப்பூரில் நடைபெற்ற டபிள்யூ.டி.ஏ மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.இவர் தன்னை எதிர்த்து விளையாடிய ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.மகளிர் இரட்டையர் பிரிவில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடி  7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-செக்.குடியரசின் லூஸி சஃபரோவா ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
3.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.