Daily-Current-Affairs

இந்தியா

1.திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையரங்கின் திரையில் தேசியக் கொடி காட்டப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்தியரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2.பணம் செலுத்த உதவும் ஸ்வைப்‌‌ இயந்திரங்களுக்கு  12.5 சதவீதம் உற்பத்தி வரி, மற்றும் 4 சதவிகித கூடுதல் வரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து  5 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு பெண்கள் கடந்த நவம்பர் 29-ம் தேதி முதல் தர்காவில் வழிபாடு செய்தனர்.
4.தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டம் – 1961 மற்றும் நிதிச்ச சட்டம் – 2016 ஆகிய இரண்டு சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டு வரும் ‘வரிச் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
5.சபரிமலையில் உதயாஸ்தமன பூஜை செய்வதற்கு 2034-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டது.முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அவர்கள் பெயரில் பூஜைகள் நடத்தப்படும்.முன்பு உதயாஸ்தமன பூஜைக்கு ரூ.25 ஆயிரமாக இருந்த கட்டணம்,தற்போது ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
6.ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக காங்கிரஸ் எம்பி கரண் சிங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்  இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

உலகம்

1.ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் தலைமை நீதிபதியாக  சூசன் கீஃபெல் (62) நியமிக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தின் 113 ஆண்டு கால வரலாற்றில் பெண் ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
2.பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக கமர் ஜாவேத் பாஜ்வா (57),  கடந்த நவம்பர் 29-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
3.வட இந்திய சமுத்திர படுகையில் புதிய புயல் உருவாகியுள்ளது. அதற்கு ‘நாடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் பெயரை  ஓமன் நாடு சூட்டியுள்ளது.

விளையாட்டு

1.இந்திய அணி முதல் 20 டெஸ்ட் போட்டியில் 12 ஆட்டத்தில் டோனி தலைமையில் வென்று இருந்த சாதனையை விராட்கோலி சமன் செய்துள்ளார்.மேலும் இந்த வருடத்தில் இங்கிலாந்து வீரர் ஜோரூட் டெஸ்ட் போட்டியில் 11-வது முறையாக 50 ரன்களுக்கு அதிகமாக எடுத்துள்ளார்.இந்த வருடத்தில் அதிக முறை டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கு அதிகமாக சேர்த்த வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றுள்ளார்.
2.மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.ஆண்டுதோறும் டிசம்பர் 3 -ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இப்போட்டிகள் நடைபெறுகிறது.இவ்விழாவை அண்ணா பல்கலைக் கழக மைதானத்தில் சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா தொடங்கி வைக்கிறார்.

முக்கிய தினங்கள்/வாரங்கள்

1.இன்று உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day).
எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயை 1981ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர். இது எச்.ஐ.வி. (HIV) என்னும் வைரஸ் மூலம் பரவுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தாக்கி அழிப்பதால், உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து விடுகிறது. இதனால் பல நோய்கள் தொற்றி, இறப்பு ஏற்படுகிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987இல் இத்தினம் அறிவிக்கப்பட்டது.
2.இன்று பனாமா நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
3.நாகலாந்து தனி மாநிலமாக உருவான நாள் 01 டிசம்பர் 1963.
4.எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்ட நாள் 01 டிசம்பர் 1981.
5.முதலாவது செயற்கை இதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்ட நாள் 01 டிசம்பர் 1982.